1200 x 80 DMirror

 
 

ஹிருணிகா பிரேமச்சந்திர, நிரோஷா அத்துகோரல இன்னும் சில பெண்களோடு இணைந்து வந்து ஜனாதிபதியின சிறிய வீட்டை சுற்றி மேற்கொண்ட போராட்டம் இலங்கையில் மிகப் பெரிய தலைப்பாகும். அது ஒரு முக்கியமான தலைப்பு மாத்திரமல்ல ஒரு சம்பவத்தின் ஆரம்பமாகும். ஐக்கிய மக்கள் சக்தியின தலைமைக்காரியாலயம் மீது நடத்தப்பட்ட கூல் முட்டைத் தாக்குதல் என்பது இதனுடைய ஒரு தொடராகவே இருந்திருக்க வேண்டும். ஹிருணிகாவின் வீட்டுக்கு மல தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இன்று ஊடகங்களில் காணப்பட்டது.

ஹிருணிகாவும் நிரோஷாவும் மேற்கொண்ட இந்த வேலை சரியானதா? அதுதான் இன்று முக்கியமான தலைப்பாக மாறி உள்ளது. சரியா பிழையா என்ற கலந்துரையாடலுக்கு அப்பால் சென்று சிலர் அந்த வேலைக்கு ரிட்டேன் ஒன்றை வழங்குவதற்கு ஆரம்பித்துள்ளார்கள். மஹிந்தானந்த குறிப்பிடுவது அது ஒரு அருவருக்கத்தக்க வேலை என்று. ஜனாதிபதி அவருக்கு உரிமையான உத்தியோகபூர்வ வாசஸ்தளத்திற்கு செல்லாமல் மக்களுக்கு ஒரு முன்மாதிரியை வழங்கி அந்த இடத்தில் இருக்கின்றார். அந்த இடம் சென்று தேவையற்ற முறையில் நடந்து கொண்டது தவறு என்று தான் மஹிந்தானந்த குறிப்பிடுவது.

ஜனநாயகத்தின் உயர்ந்த பட்சம் இருப்பது அதன் மூலம் தென்படுவதாக மஹிந்தானந்த குறிப்பிடுகிறார்.ரட்டே ரால மஹிந்தானந்தவிற்கு சொல்லுவது இந்த நாட்டிலேயே முக்கியமாக அமைவது ஜனாதிபதி இருக்கின்ற இடம் அல்ல ஜனாதிபதி ஆக்குகின்ற வேலையாகும். அடுத்ததாக அந்த உத்தியோகபூர்வ இல்லத்திற்கு போவது போகாமல் இருப்பது என்பதை தீர்மானிப்பது மக்கள் முன்மாதிரியைவிட அவரைச் சுற்றி உள்ள ஜோதிடர்கள் சொல்லுகின்ற பலனுக்கு ஏற்பவே. அவ்வாறு மக்களது பணம் தொடர்பில் நினைப்பவர்களுக்கு இவ்வாறான கஷ்டமான நிலையில் ஹெலிகொப்டர் எடுத்து சாஸ்த்திரம் பார்ப்பதற்கு செல்லாது இருந்திருக்க முடியும்.

இவ்விடத்தில் சரியாக நடைபெற்றது நேட்டோவுக்கு நடைபெற்றது போன்றுதான். ரஷ்யா உக்ரேனை தாக்கியபோது நேட்டோ ஏற்படுத்திய பொய் அபிமானம் காலால் மிதிக்கப்பட்டது. உண்மையில் ஜனாதிபதியின் மிரிஹான வீடு என்று சொன்னதும் மக்களுடைய தலைக்கு வருவது பதுங்கு குழியே. அவை அமைக்கப்பட்டிருப்பது அந்த தினத்தில் ராஜித்த குறிப்பிட்ட விடயங்களும் ஏதுவாக அமைந்திருக்கின்றது.குளம் ஒன்றும் உள்ளதாம். அங்கே மக்களுடைய உடல்களை உண்ணுகின்ற சுறா மீன் வகைகள் காணப்படுகின்றன.

வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களை கொண்டு செல்வது அங்கு தான். அவர்களை அங்கு அந்த மீன்களுக்கு போடுவார்கள். உண்மையில் அவை பிரபந்த கதைகளாம். இருப்பினும் அவை மக்களுடைய மனதிற்கு அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. அதுபோன்று எல்லோரும் தெரிந்த ஒரு உண்மை ஒன்றும் இருக்கின்றது.அனுர குறிப்பிடுவது ஜனாதிபதி இருப்பதனால் தொடர்ச்சியாக அந்த பிரதேசத்தில் இருக்கக்கூடிய வீடுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது என. அதாவது அங்கு இருக்கக்கூடிய மக்களுக்கு அது ஒரு பாரிய இடைஞ்சலாக இருக்கின்றது. ஜனாதிபதி அவர்கள் செல்லுகின்ற பாதையில் வரிசைகள் இருக்க முடியாதாம். ஜுபிலி பிரதேசத்தில் இருக்கக்கூடிய பால்மா வரிசை கூட நாட்டில் பால்மா வரிசை அற்ற காலத்தில் நிறுத்தப்பட்டுவிட்டது.

தேசிய மக்கள் சக்தி அந்தப் பகுதிக்கு ஒரு கூட்டம் ஒன்றை நடாத்த சென்று ஒரு மணித்தியாலத்திற்குள் அந்த கூடாரம் மற்றும் அனைத்து விடயங்களையும் அப்புறப்படுத்துமாறும் பொலீசார் குறிப்பிடுகின்றார்கள். அடுத்ததாக அந்த கூட்டத்தில் போடப்பட்டிருந்த சிவப்பு கொடிகள் கழற்றப்பட்டு அகற்றுமாறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறிப்பிட சுனில் வட்டகலவுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடந்த காலத்தில் முரண்பாடு ஏற்பட்டது. நீங்கள் காணக்கூடியதாக இருந்தது சுருக்கமாக ஒவ்வொரு பகுதியில் வகையான சண்டியன்கள் உருவாகி இருக்கிறார்கள்.

நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் அதே போன்று ஒரு சம்பவம் தான் இங்கேயும் நடைபெறுவது. கேள்விப்பட்டிருப்பீர்கள் கடுவல வசந்த,வெலே சுதா. அவ்வாறான ஒரு படமே இங்கே நடைபெறுகின்றது.மிரிஹான என்றால் ஜனாதிபதிதான். அதனால் உடம்பிலேயே உயிர் இருக்கக்கூடிய ஒருவர் எனில் நாடித்துடிப்பு இருக்கக்கூடிய ஒருவர் அந்தப் பாதையால் செல்லும் பொழுது இரண்டு முறை யோசிக்க வேண்டிய தேவை ஏற்படும். நினைத்து பார்க்கும்போது அந்த பிரதேசத்தில் கிடைக்கக்கூடிய மக்களுக்கு கிடைக்கக் கூடிய ஒரே ஒரு சலுகையாக 24 மணி நேரமும் மின் துண்டிக்கப்படாமல் இருப்பது தான். இருப்பினும் அவ்வாறான இடத்திற்கே அவர்கள் இருவர்களும் இன்னும் சில பெண்களை இணைத்து போராட்டத்தை மேற்கொண்டது.உண்மையில் அது குறித்கது கதைக்க விடயம் ஒன்று உள்ளது

அவர்கள் ஊர்வலமாக தான் அந்த இடத்திற்கு சென்றார்கள். அந்த ஊர்வலத்தை பார்க்கின்ற சந்தர்ப்பத்தில் அது உண்மையில் ஒரு பலம் வாய்ந்த ஒரு தன்மை காணப்பட்டிருந்தது. அவர்கள் வந்த விதத்தை பார்த்தால் ஆண்கள் தோல்வியே. மக்கள் போராட்டத்தில் இருக்கக்கூடிய போராட்ட உணர்வு அங்கே காணப்பட்டது. உண்மையில் இந்த நாட்டினுடைய அரசாங்கத்துக்கு எதிரான அந்தப் போராட்டத்தை கொண்டு வந்தது ஒரு ஆசிர்வாதம்தான். அதேபோன்று ஏனையவர்களுக்கும் பயம்
ஏற்பட்டிருக்கும்.

அவ்வாறான எல்லா தேசியப் போராட்டத்தில் ரட்டே ராலவும் மேற்கொண்டு இருக்கின்றார். அதனால் உடம்பில் வருகின்றதும் ஊடகத்திற்கு முன் நடிக்கின்றதும் பற்றி ரட்டே ராலவுக்கு சிறப்பாக தெரிகின்றது. உண்மையில் ஹிருணிகாவும் நிரோஷாவும் இந்த இடத்தில் பயன்படுத்தியது மிகவும் முன்னேற்றகரமான உபாயம் ஆகும்.அவர்களது பெண் தன்மையை பயன்படுத்தி செய்ய முடியுமான உயர்ந்தபட்ச போராட்டத்திற்கு தேவையானவற்றை ஒன்று சேர்த்தார்கள். அதனால் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு பெல்ட் ரோலாக மாறியது.தேசபந்துவின் பொலிசும். உளவுப் பிரிவும். உண்மையில் அந்த இடத்திற்கு அவர்கள் வருவதாக உளவுப்பிரிவு தெரிந்திருக்கவில்லை. இல்லையென்றால் பெண் பொலிசாரை பயன்படுத்து அதனை இடை நடுவில் நிறுத்தி இருப்பார்கள். அடுத்ததாக தெரிந்து கொண்டு வரவிட்டால் அரசாங்கத்தை சார்ந்தவர்களுக்கு இவ்வளவு காரமாக இருக்க அவசியம் கிடையாது.

உண்மையில் உளவுப்பிரிவு இதனை தெரிந்து இருக்கவில்லை என்பது உறுதியானது. அந்த இடத்தில் ஆண் பொலிசார்கள் மாத்திரமே இருந்தார்கள். அவர்கள் அந்த பயணத்தை தடுப்பதற்கு மேற்கொள்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உடம்பில் கை வைக்க வேண்டாம் என்று அந்தப் பெண்கள் சத்தமிட்டார்கள். அதுதான் ரட்டே ரால சொல்வது அந்த போராட்டத்தில் அவர்கள் பெண் என்பதனை ஆயுதமாக பயன்படுத்தி கொண்டார்கள். உண்மையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்குமிங்கும் ஓடுவதைத் தவிர வேறு ஒன்றையும் செய்ய முடியவில்லை.

ரட்டே ராலவுக்கு தோன்றுவது தற்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் பரிதாபநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.பாவம் தேசபந்துவின் பொலிஸ் மா அதிபர் கனவும் கேள்விக்குறியாகிவிடுமோ தெரியவில்லை. உண்மையில் ஜனாதிபதி பாதுகாப்பு அந்த இடத்தில் பூச்சியத்துக்கு விழுந்துள்ளது.ரட்டே ரால குறிப்பிடுவது ஜனாதிபதியின் வீட்டுக்கு முன்னர் வந்தவர்கள் தொடர்பில் அல்ல. வருகை தொடர்பில் பாதுகாப்பு பிரிவுக்கு எவ்விதமான விதமான தகவல்களும் கிடைக்கப்பெறாமல் இருந்தது பாரிய தவறாகும். பாதுகாப்பில் பெரிய இடைவெளி இருக்கின்றது. தற்போது இந்த போராட்டம் சரியா பிழையா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவ்வாறான கலந்துரையாடல் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளது.

ஹிருணிகாவின் அரசியலுக்கும் நிரோஷாவின் அரசியலுக்கும் ரட்டே ரால இணங்குவது இல்லை . நிரோசா ரட்டே ராலவின் பேஸ்புக் நண்பர். அதனை விட இவர் ஒரு விசேஷ விஷயமும் இல்லை. அவருடைய அரசியலை ஏற்றுக் கொள்ள ரட்டை ராலவுக்கு முடியாவிட்டாலும் இந்த போராட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியும். அதற்கு பிறகு மிரிஹான அல்ல எந்த தூத்துக்குடியில் இருந்தாலும் நாட்டினுடைய ஜனாதிபதியை தேடிச்சென்று கேள்வி கேட்க முடியும். நாட்டு மக்கள் ஏன் கேட்பது எனின் ஜனாதிபதி தான் 5ஆம் திகதிக்கு பின்னர் மின் துண்டிப்பு இல்லை குறிப்பிட்டார்,எரிபொருள் வரிசை இல்லையென்றும்.

எனவே அதனை அவரிடம் தான் கேட்கவேண்டும். கடந்த காலத்தில் இந்த நாட்டினுடைய போராட்ட தன்மையாக இல்லாடினும் முக்கிய அம்சமாக இருந்தது மக்கள் எதிர்ப்பு சட்டத்திற்கு கை உயர்த்தியவர்களுக்கு கிராமத்துக்கு வரவேண்டாம் என்றும் அவர்களுடைய வீடுகளை மக்கள் சுற்றி வளைத்தார்கள். அந்த தன்மையை கொண்டு வந்தது ஜேவிபி .அது ஒரு முக்கியமானது. தற்போது அது ஹிருணிகா நிரோசா போன்றவர்கள் அதனை செய்து காட்டியுள்ளார்கள். கிராமத்திலுள்ள அதிகாரம் படைத்தவர்கள் குறிப்பிடுகின்ற விடயங்களை கையை உயர்த்திய உறுப்பினர்கள் அல்ல..இலங்கை ஜனநாயக குடியரசு ஜனாதிபதியின்
வீட்டை .அது இந்நாட்டின் போராட்ட தன்மை கொண்டர்களுக்கான பிரவேசமே. அதேபோன்று பெண்களின் போராட்டத்தில் விசேடமான வகிபாகம் உள்ளது என்பதனை காட்டினார்கள்.

அதேபோன்று அது அரசாங்கத்திற்கும் பயத்தை ஏற்படுத்துகின்ற சம்பவமாக மாறியுள்ளது. அது எமது நாட்டினுடைய வீதி போராட்ட வரலாற்றில் ஏற்பட்ட புதிய ஒரு போராட்டம் ஆகும். இதன் முன்னால் அரசாங்கத்திற்கு நல்ல பெயரை பெற வேண்டுமென்று துடிக்கின்ற மதுர விதானகே போன்ற அரசியல் கோழைகள் ஜனாதிபதி பதவிக்கு பங்கம் ஏற்படுத்தி இருக்கின்றார்கள். அந்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியின் இன்னமும் எந்தவிதமான கருத்துக்களையும் குறிப்பிடவில்லை. அவ்வாறான ஒரு நிலையில் மதுர போன்றவர்கள் செய்கின்ற இந்த மடத்தனமான வேலையானது அதிகமானவர்களுக்கு நினைக்கத்தோன்றும் இந்த கூல்முட்டை தாக்குதலில் பின்னால் இருக்கக்கூடிய வர் ஜனாதிபதி என்று.

ஏனென்றால் அவருடைய வீட்டை சுற்றி வளைத்த சந்தர்ப்பத்தில் இந்த விடயங்கள் அனைத்தும் நடைபெறுகின்றது. தற்போது ஹிருணிகா, நிரோசா போன்றோர் இந்த நாட்டினுடைய மக்களுடைய போராட்டத்மை புதிய பரிணாமத்தில் உள்ளே உட்படுத்தி இருக்கின்றார்கள். அதுதான் தங்களுடைய அலுவலகமாக இருந்தாலும் சரி விவசாய நிலமாக இருந்தாலும் சரி வீதியாக இருந்தாலும் சரி மேற்கொள்கின்ற போராட்டமாகும். அதுதான் உண்மையானது. தற்போது அதனுடைய உயர்ந்தபட்சத்தை காட்டியிருக்கின்றார்கள். அதுதான் ஜனாதிபதியின் வீட்டை சுற்றி மேற்கொண்ட போராட்டம். அதுதான் உயர்ந்தபட்சம். குறைந்தபட்சம் என்று சொன்னால் அது யாரும் செய்திருக்கின்றார்கள்.

உயர்ந்தபட்சத்துடன்தான் அதிகாரமானது பின்னிப்பிணைந்துள்ளது. இது இவர்களை குழப்பத்திற்கு உட்படுத்தி உள்ளதை அவதானிக்க முடிகின்றது. உயர்ந்தபட்சம் இரண்டு பக்கம் பயன்படுத்தி உந்துதல் அளிக்கும் பொழுது தான் அதிகாரம் தீர்மானம் மிக்கதாக அமையும். எவ்வாறு இருந்த போதிலும் உயர்ந்த பட்சம் இந்த நாட்டினுடைய பெண்கள் கூட்டத்தினரால் குறைந்த அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளார்கள். உயர்ந்தபட்சத்திற்கு உயர்வாக பயம் ஏற்பட்டுள்ளது. பெண்கள் கூட்டம் மேற்கொண்ட வேலையாள் உயர்ந்தபட்சத்திற்கு உயர்ந்தபட்ச அவமானம் ஏற்படுத்தப்பட்டுள்ளதனை அவதானிக்க தோன்றுகின்றது.

அப்படியாயின் போய் வருகின்றேன். கடவுள் துணை ,வெற்றி கிட்டட்டும்

இப்படிக்கு
ரட்டே ரால

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி