1200 x 80 DMirror

 
 

கோதுமை மாவின் விலையை இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்க கோதுமை மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 35 ரூபாவால் அதிகரிக்க செரண்டிப் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

மேலும், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிக்க பீரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.

பீரிமா நிறுவனம் விநியோகத்தர்களுக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக விநியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு, கோதுமை மா தட்டுப்பாடு, மூலப் பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் பேக்கரி தொழில்துறை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களில் 1,000க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும், தற்போது இயங்கி வரும் 6,000 பேக்கரிகளில் பெரும்பாலானவை தினசரி உற்பத்தியில் 50% கூட இல்லை என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதை அடுத்து,

பணிஸ் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரித்துள்ளது.

மதிய உணவு பொதி ஒன்றின்  விலை 20 ரூபாவால் அதிகரித்துள்ளது.

கொத்து பார்சல் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரித்துள்ளது.

சிற்றுண்டிகளின் விலை 5 ரூபாவால் அதிகரித்துள்ளது.

மேலும் முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் கட்டணத்தை முதல் ஒரு கிலோ மீற்றருக்கு 80 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி