செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று (17) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும் கட்சியின் உறுப்பினர்களும் கலந்துக்கொண்டுள்ளனர்.

அதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தை பேரணியாக முன்னோக்கி நகரத்த முற்பட்ட வேளை,பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. தற்போது போராட்டகளத்தில் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் சிவில் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.

நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினர் பலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் இதற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

25-6878cab9571fe.jpeg

 

25-6878c175b8f98.jpeg

 

25-6878c176d0bbb.jpeg


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி