இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய மனி புதைகுழி தொடர்பான விசாரணைகள் மூன்று வருடங்களாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீண்டும் ஆரம்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


வடக்கில் 70 வீதமான நிலங்களை மகாவலி அதிகார சபையின் ஊடாகவும், வன இலாகா திணைக்களத்தின் ஊடாகவும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் ஊடாகவும், தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாகவும் அபகரித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பியான சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

 ஜனாதிபதி மக்களிடையே சென்ற போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள “ரட்டே ரால“ அமைப்பு உண்மையில் ஜனாதிபதி மக்களிடையே செல்லுவது மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் எந்த பலனும் கிடையாது என தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஆதிக்கத்திலிருந்து நாட்டை காப்பாற்றுவதற்கு இரத்தம் சிந்தி உயிர் தியாகம் செய்த இந்த மண்ணின் மக்களை மரியாதையுடன் நினைவு கூறுவதாக மொனராகலையில் இடம்பெற்ற தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் தேசபந்து கரு ஜயசூரிய தெரிவித்தார்.


அங்கு மேலும் உரையாற்றிய அவர்,


நாம் சுதந்திரமடைந்து 73 ஆண்டுகள் ஆகின்றது. நாம் சுதந்திரம் பெறும் சந்தர்ப்பத்தையும் இன்றைய நிலைமையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மகிழ்ச்சி அடைய முடியுமா என்பது கேள்விக்குறியாகவே அமைந்துள்ளது.


நாம் சுதந்திரம் பெற்றதற்கு பின் சுதந்திரம் அடைந்த நாட்டவர் எம்மை விட முன்னேறி உள்ளனர். எமது நாட்டில் இடம்பெற்ற இன, மத, அரசியல் பாகுபாடுகள் மற்றும் பயங்கரவாதம் ஆகிய காரணங்களினால் நாட்டின் வளர்ச்சி பெருமளவில் பாதிப்புக்குள்ளானது.
இவற்றிற்காக தனி நபருக்கோ வேறு ஏதும் குழுவுக்கும் குற்றம் சுமத்த விரும்பவில்லை. அதில் பயனில்லை. நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த மக்கள் வாழ்ந்த ஊவா மாகாணம் வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்தகால தவறுகளை உணர்ந்து தேசிய மற்றும் மத ஒற்றுமையின் ஊடாக ஜனநாயகம்மிக்க சுதந்திரமான சுபீட்சமான நாட்டை கட்டியெழுப்பும் நோக்கத்துடனே நாம் இங்கு வருகை தந்தோரம். நாம் எந்த ஒரு கட்சி சார்ந்தும் செயற்படவில்லை. எமக்கு இனவாத கொள்கைகளும் இல்லை. அனைத்து மதங்களும் சமாதானத்தையே போதிக்கின்றது.
இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்கு வாழும் மதத்தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் எமது இந்த உன்னத நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு பக்கபலமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டோம்.
இந்த கலந்துரையாடலில் வேடர்களின் தலைவர் கலந்து கொண்டமை எமக்கு மாபெரும் சக்தியாகும். அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் நாம் செயற்படுவோம்.
ஏனைய உலக நாடுகள் போன்றே நாமும் பாரிய சவால்களை எதிர்நோக்கி உள்ளோம். கொரோனா தொற்று, பொருளாதார வீழ்ச்சி காரணமாக நாட்டு மக்கள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். இத்தகைய சூழ்நிலையிலும் இன மற்றும் மத வன்முறைகளை தோற்றுவிப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.
மீண்டும் நாட்டில் வன்முறைகள் ஏற்படாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் பிரதிநிதிகளுக்கும் இலங்கை வாழ் மக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம். மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
தற்போது காணப்படும் நெருக்கடிகளிலிருந்து நாட்டை காப்பாற்றுவதற்கு அனைத்து அரசியல் தலைவர்களும் கொள்கை ரீதியாக ஒன்று திரள வேண்டும். எமக்கு உலகில் தனித்து வாழ முடியாது. நாம் சர்வதேச மரியாதையையும் பெற வேண்டும். ஜனநாயகத்தையும் உரிமைகளையும் பாதுகாக்கும் நாட்டை தேடி சுற்றுலா பயணிகளும் முதலீட்டாளர்களும் வருவது உறுதியாகும்.
அனைத்து பிரஜைகளுக்கும் நட்புக்கரம் நீட்டும்மாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். இந்த விடயங்களை அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றோம். என்றார்.

 jaffna w

 

14

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

15

15

https://bit.ly/3uHGkH6

16

 

17

18 19

20

21 22


பொதுமக்கள் வாக்காளராகப் பதிவு செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
ஒன்லைன் மூலம் வாக்காளர் பதிவு இடம் பெறும் நிலையில், ஆயிரகணக்கானவர்கள் இன்னமும் பதிவு செய்யப்படவில்லை என எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு மத்தியில் இந்த பேரணி இடம்பெற்றுள்ளது.


கடந்த 24 மாதங்களில் அரசாங்கம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபா பணம் அச்சடித்துள்ளதாக பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன சபையில் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை, நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

இவ்வாறு பணம் அச்சிடப்பட்டதன் விளைவாக நாட்டின் பணவீக்கமானது 16 வீதமாக அதிகரித்துள்ளதுடன் 25 வீத உணவு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் நாட்டின் வங்கிக் கட்டமைப்பும் வெகு விரைவில் வீழ்ச்சி காணும் அச்சுறுத்தல் உள்ளதாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன சபையில் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

14

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

15

https://bit.ly/3uHGkH6

16

 

17

18 19

20

21 22

 வட பகுதி மீனவர்களின் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வினை பெற்றுதர அரசாங்கம் தவறினால் ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்தினையோ முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்துவதை போன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து அரசாங்கம் எதனையும் மறைக்கவில்லை என அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள்  பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக இலங்கை ஆதரவாக நாடுகளை ஒன்று திரட்டும் முயற்சியில் வெளிவிகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஈடுபட்டுள்ளார்.

நல்லாட்சியின் போது வெடித்த உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுவெடிப்புகளுக்குப் நீதியைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போதைய ஆட்சியாளர்களை ஆட்சிக்குக் கொண்டுவருவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இலங்கையின் கத்தோலிக்க தலைமைத்துவம், அதே இலக்கை அடைய வேறு ஒரு அரசாங்கத்தை நியமிக்க எதிர்பார்த்துள்ளது.

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி