இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு இந்தியா எவ்வளவு அழுத்தங்களை பிரயோகித்தாலும் தனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட தீர்வுக்கு இந்தியா ஆதரவளிக்காது என வடக்கின் மூத்த அரசியல்வாதி ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு தயாராகும் ஐக்கிய தேசியக் கட்சி!ஐக்கிய தேசியக் கட்சி சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தில் இருந்து விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சைகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பாரிய நெருக்கடியில் இருந்து மீள்வதை வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சி பல்வேறு மட்டத்தில் வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அந்தக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரம் – கிஸ்ஸா குவானி பஜார் பகுதியில் உள்ள ஜாமியா மசூதியில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.


 மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி, தீப்பந்தம் மற்றும் டோர்ச் லைட் ஏந்திய போராட்டமொன்று நேற்றிரவு(வியாழக்கிழமை) மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு மற்றும் பெரிய கல்லாறுக்கு இடைப்பட்ட பாலத்தில் நேற்றிரவு 8.30 மணியளவில் ஒன்றுகூடியவர்களால் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.


தற்போது நாட்டில் பரவலாக பல மணிநேர மின்சாரத்தடை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் மக்களின் பாதிப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.


இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


குறித்த போராட்டத்தில் பங்கேற்று கருத்து வெளியிட்ட இரா.சாணக்கியன், நாடளாவிய ரீதியில் இந்த போராட்டத்தினை விஸ்தரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.


இதேவேளை, இதேபோன்றதொரு போராட்டம் நேற்றிரவு யாழ்ப்பாணத்திலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

 

WhatsApp Image 2022 03 04 at 9.29.56 AM

WhatsApp Image 2022 03 04 at 9.30.02 AM

WhatsApp Image 2022 03 04 at 9.30.01 AM 1

 

ரஷ்யா இல்லாத உலகத்தை புட்டின் மீதம் வைப்பாரா

என்ற கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான பதிலை வழங்குகின்றார்கள். சிலர் நியாயமானது என்று குறிப்பிடுகின்ற சந்தர்ப்பத்தில் சிலர் அதனை நியாயமற்றது என்றும் குறிப்பிடுகின்றனர். இன்னும் சிலர் உரிய பதிலை வழங்குவதற்கு முடியாமல் இருக்கின்றனர். இன்று ரட்டே ரால சொல்வது இது சாதாரணமானதோ அசாதாரணமானதோ என சொல்வதற்கு அல்ல .இது தொடர்பில் ஒரு தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க முடியாமல் இருக்க கூடியவர்களுக்கு உதவி செய்வதற்கு ஆகும்.


இலங்கையில் உள்ள கத்தோலிக்க திருச்சபை, ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு சர்வதேசத்தை நாடியுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் தமது எதிரிகளை பழிவாங்க பயன்படுத்துகின்றனர் என மனித உரிமை வழக்கறிஞர் ஒருவர் குற்றம் சாட்டுகிறார்.

ஆளும் கட்சியில் இருந்த விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சுப் பதவிகள் பறிக்கப்பட்டுள்ள நிலையில், வாசு தேவநாணயக் காரவின் பதவியும் பறிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி