1200 x 80 DMirror

 
 

ஆளும் கட்சியில் இருந்த விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சுப் பதவிகள் பறிக்கப்பட்டுள்ள நிலையில், வாசு தேவநாணயக் காரவின் பதவியும் பறிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



அத்துடன் ஜயந்த சமரவீரவின் இராஜாங்க அமைச்சுக்கும் ஆப்பு தயாராகியுள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஆளும் கூட்டணியில் உள்ள 11 கட்சிகளில் உள்ள 30 எம்.பிக்கள் உள்ளிட்ட தரப்பினர் நேற்று முன்தினம் தனியான ஒரு மாநாட்டை நடத்தியிருந்தனர். இந்த மாநாட்டில் பசில் ராஜபக்சவை கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பசில் ராஜபக்ச, ஜனாதிபதியிடம் முறையிட்டிருந்தார். அத்துடன், இவர்கள் அனைவரும் அரசாங்கத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து ஜனாதிபதி தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் விசேட கூட்டமொன்று நடைபெற்றதுடன், விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோரை நீக்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இந்தச் சந்தர்ப்பத்தில் பலரை ஒரே முறையில் பதவி நீக்குவது அரசாங்கத்திற்கு தலையிடியாக மாறும் என்பதால் இருவரை மட்டும் பதவி நீக்குவோம் என்று ஜனாதிபதி தரப்பில் கூறப்பட்டுள்ளது,

இதனையடுத்தே விமல், உதயகம்மன்பில ஆகிய இருவரின் பதவிகளும் உடனடியாக பறிக்கப்பட்டன. 

மாநாடு நடத்தப்பட்ட பின்னர் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி, இந்தப் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ள முடியுல் அல்லவா. எதற்காக இவ்வாறு தனியான கூட்டங்களை நடத்தி பிரச்சினைகளைப் பெரிது படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பதிலளித்துள்ள வாசுதேவ நாணயக்க, பேசுவதற்கு எமக்கு எந்தவொரு இடமோ, சந்தர்ப்பமோ இல்லை என்று பதிலளித்துள்ளார்.
 
இதன்பின்னரே ஜனாதிபதி தலைமையில் பசில் ராஜபக்ச விசேட கூட்டததை கூட்டியுள்ளார்.
 
பதவி நீக்கம் கடிதங்களைத் தருவதற்காக பெற்றோரை வீணடிக்க வேண்டாம்
 
பதவி நீக்கப்பட்ட விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோருக்கு ஜனாதிபதியின் கையெழுத்திட்ட கடிதங்களை வீடுகளுக்குச் சென்று வழங்குமாறு ஜனாதிபதி செயலக பாதுகாப்புப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,
 
இதற்காக குறித்த இருவரும் எங்கிருக்கிறார்கள் என்பதை அறிவதற்காக விமல் மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் பிரத்தியேக செயலாளர்களைத் தொடர்புகொண்டுள்ளனர்.
 
உதய கம்மன்பிலவின் பிரத்தியேக செயலாளரிடம் தொடரபுகொண்ட ஜனாதிபதி செயலக அதிகாரியொருவர், அவர் எங்கிருக்கிறார், பதவி விலகும் கடிதத்தை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இதற்குப் பதிலளித்துள்ள பிரத்தியேக செயலாளர், அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை செய்திகளின் மூலம் அறிந்துகொண்டோம். எனவே, இந்தக் கடிததத்தைத் தரவந்து, எரிபொருள் இல்லாத நேரத்தில், பெற்றோலை வீணடிக்க வேண்டாம்.'' என்று கூறி முடித்துள்ளாராம்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி