பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் தமது எதிரிகளை பழிவாங்க பயன்படுத்துகின்றனர் என மனித உரிமை வழக்கறிஞர் ஒருவர் குற்றம் சாட்டுகிறார்.

ஆளும் கட்சியில் இருந்த விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சுப் பதவிகள் பறிக்கப்பட்டுள்ள நிலையில், வாசு தேவநாணயக் காரவின் பதவியும் பறிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமல் வீரவங்சவின் அமைச்சுப் பதவியை ஏற்க எஸ்.பி. திஸாநாயக்க ஏற்றுக்கொண்டதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு உதவும் வகையில் 12-13 எரிபொருள் கார்கோக்களை இலங்கைக்கு வழங்கும் என இந்திய எண்ணெய் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் அமைச்சரவையில் திடீர் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் இரு அமைச்சர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு சீனாவின் பீஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால பராலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா நாளை (04) நடைபெறவுள்ளது.

பரசிட்டமோல் மாத்திரை ஒன்றின் விலையை உயர்த்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பரசிட்டமோல் மாத்திரை ஒன்றின் புதிய விலை ரூ.2.50. ஆகும். பெப்ரவரி 28ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தை பிரதிநிதுத்துவம் செய்யும் சிறிய கட்சிகள் கூட்டமைப்பானது இன்று தங்களுடைய முன்மொழிவை அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளது. முழு நாடும் சரியான பாதைக்கு என்றுதான் அந்த முன்மொழிவுக்கு பெயர் வைத்திருக்கிறார்கள். முழு நாடும் சரியான பாதைக்கு எடுப்பதற்கு அரசாங்கத்தின் உள்ளே இருக்கக்கூடிய கைவிடப்பட்ட செட் ஒன்று தான் தயாராகியுள்ளது. வழிதவறிய கூட்டமொன்று. தங்களுடைய பாதை மாத்திரம் வழி தவறியதன்றி நாட்டின் பாதையை தவறச்செய்து ராஜபக்சக்களில் இவ்வளவு காலம் சாய்ந்து கொண்டு வயிற்றுப்பசியை பாதுகாத்த கூட்டணி. 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு கை உயர்த்தி மக்களுடைய ஜனநாயக உரிமைகளை ராஜபக்சக்களுக்கு முன் தாரை வார்த்தவர்கள். பெசில் ராஜபக்ஷ என்ற ஏழு மூளையுடைய அறிஞரை பாராளுமன்றம் வரை கொண்டுவந்து நிதியமைச்சர் பதவியை வழங்கி மக்களது இறைமையை கொள்ளை கொள்ளையடிப்பதற்கு வழி சமைத்த குழுவினர்.

இன்று (03) முதல் நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.


'வடமாகாண காணி ஆணையாளருக்கு அதிகாரம் வழங்காமல் நடமாடும் சேவைகளால் காணி பிரச்சினைகளை தீர்க்க முடியாது" என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி