1200 x 80 DMirror

 
 

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் தமது எதிரிகளை பழிவாங்க பயன்படுத்துகின்றனர் என மனித உரிமை வழக்கறிஞர் ஒருவர் குற்றம் சாட்டுகிறார்.


'அரசியல்வாதிகளுக்கு எதிரிகளைப் பழிவாங்குவதற்கு இந்த பயங்கரவாதத் தடைச் சட்டம் சிறந்த வாய்ப்பாக அமைகிறது.

எனவே அந்த சட்டத்தை நீக்காமல் அப்படியே வைத்திருப்பதற்காகத்தான் 'திருத்த சட்டம்" என்கிற கதைகள்.

கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவரான சட்டத்தரணி சேனக பெரேரா மனிதாபிமானமற்ற இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை திரும்பப் பெறுங்கள்!

கொழும்பு பௌத்தலோக மாவத்தையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று(3) நடைபெற்ற மௌனப் போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக ஒழிக்கக் கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, சட்டத்தரணி சேனக பெரேரா மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள பிரேரணைகள், ஜெனிவா மனித உரிமைகள் பேரவையை இலக்காகக் கொண்ட ஒரு திரைப்படமாகும்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசு கட்சி இளைஞர் முன்னணி வலியுறுத்தியுள்ளது. சுமந்திரனும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதுடன், இன்று ஜெனிவாவில் இலங்கை தொடர்பான கலந்துரையாடலின் போது பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக ஒழிக்க உறுப்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

கைதிகளைப் பாதுகாக்கும் குழு தனது கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை இலங்கையில் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு அனுப்பிவைத்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டிற்கு அனுப்பியிருந்தது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக தலைநகரில் உள்ள செய்தியாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

https://bit.ly/3uHGkH6

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி