பல தசாப்தங்களாக காணாமல்போன ஆயிரக்கணக்கான மக்களின்

தலைவிதி மற்றும் இருப்பிடத்தை வெளிப்படுத்தவும் அந்தக் குற்றங்களுக்கு காரணமானவர்களை தண்டிக்கவும் இலங்கை அரசாங்கம் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்று (17) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்தக் குற்றங்களில் அரச பாதுகாப்புப் படைகள் மற்றும் அதனுடன் இணைந்த ஆயுதக் குழுக்களின் தொடர்பு குறித்து பகிரங்க மன்னிப்பு மற்றும் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் என்று அது மேலும் கூறுகிறது.

இந்த அறிக்கையானது காணாமல் போன அனைத்து இலங்கையர்களையும் ஒருபோதும் மறக்கக்கூடாது என்பதை நினைவூட்டுவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வாக்கர் டர்க் கூறுகிறார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான தகவல்களை எதிர்பார்த்து காத்திருக்கும் உறவினர்களுக்கு உண்மையை அறியும் உரிமை உள்ளதாகவும் காணாமல் போனவர்களுக்கு அரசாங்கம் கடன்பட்டிருப்பதாகவும் வாக்கர் டர்க் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான குற்றச்செயல்கள் அவற்றை எதிர்கொண்ட மக்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த இலங்கை சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவதாக அறிக்கை காட்டுகிறது.

காணாமல் போனோர் தொடர்பான அனைத்துத் தகவல்களும் வெளிவரும் வரை விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை கட்டாயப்படுத்தும் சர்வதேச சட்டம் தொடர்ந்தும் மீறப்பட்டு வருதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி