1200 x 80 DMirror

 
 

தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பாரிய நெருக்கடியில் இருந்து மீள்வதை வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சி பல்வேறு மட்டத்தில் வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அந்தக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

குறிப்பாக தற்போது ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணியை (டொலர்களை) எவ்வாறு ஈர்த்துக் கொள்வது என்பது குறித்து முன்னாள் பிரதமர் திட்டங்களை வகுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியை இளைஞர்களைக் கொண்டு கட்டியமைக்கும் பணிகள் உள்ளக ரீதியாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து பொதுமக்களின் கவனத்தையும், அரசாங்கத்தையும் வலியுறுத்தி சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அந்த செயற்குழு உறுப்பினர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

'இன்று நாம் எதிர்நோக்கும் பாரிய நெருக்கடிகளில் இருந்து நாட்டை விடுவித்து மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் தொடர்பில் அனைவரும் பொதுவான உடன்பாட்டுக்கு வருவோம்' என்ற தொனிப்பொருளில் இந்த சத்தியக் கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மார்ச் 25ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான சத்தியாகிரகப் போராட்டத்திற்கு இணக்கப்பாட்டுக்கு வர விரும்பும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் அண்மையில் முன்னாள் பிரதமர் சிறிகொத்த தலைமையில் இது தொடர்பான விளக்கமளிக்கும் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

அத்துடன், தற்போதைய பிரச்சினைக்கு ஏனைய எதிர்க்கட்சிகள் சரியான முறையில் திட்டங்களை வகுக்க வில்லை என்றும் அதனால் இளைஞர்களுக்கான அடித்தளத்தையிட்டு, தற்போதுள்ள நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டு, இளைஞர்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தைத் தான் வகுத்துள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இளைஞர்களை பயிற்றுவிக்கும் வேலைத் திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செயற்குழுவின் அந்த உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி