கொழும்பு - கொள்ளுப்பிட்டி - ஃப்ளவர் வீதியில், பிரதமர் காரியாலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களைக் கலைக்க காவல்துறை கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளது.

மக்களின் கருத்துக்கு அமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்வதே பொருத்தமானது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட  மோதலில் வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நால்வர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்கும், முறைப்பாடு செய்வதற்கும் ஏற்ற விதத்தில் 1971 என்ற அவசர தொலைபேசி இலக்கம் இன்று காலை 7 மணி முதல் 24 மணி நேரமும் இயங்கும் என ரயில் பொது முகாமையாளர் தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்

இன்று(13) முதல் ஏனைய மாகாணங்களுக்கான சமையல் எரிவாயு விநியோகத்தை ஆரம்பித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போதிலும், குடிவரவு பணியாளர்கள் அதனை தடுத்ததாக உத்தியோகபூர்வ தரப்புக்களை மேற்கோள்காட்டி ஏஎப்பி செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி