கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜூலை 12ஆம் திகதி தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இன்று கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அறிவித்தப்படி தாம் குறித்த நாளில் பதவி விலகுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகார பூர்வமாக அறிவித்துள்ளதாக பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இரண்டு ரஷ்ய எரிபொருள் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பிரதிநிதிகள் இன்று இலங்கை வந்துள்ளனர்.

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிகாரிகளை தற்காலிகமாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு நியமிக்க பொது நிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளது.

சில அமைப்புக்களின் தலைவர்கள், புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தை உள்ளிட்ட சில பகுதிகளுக்குள் இன்று(07) பிரவேசிக்க தடை விதித்து, கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி