உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; அரசியல் களத்தில் பந்தாடப்படுகிறது!
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலுக்கு, இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. சுமார், 270 உயிர்களை அழித்தும் 500 பேருக்குக் காயங்களையும் ஏற்படுத்திய இந்தப் பயங்கரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இன்னமும் நியாயம் வழங்கப்படவில்லை என, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்ந்தும் கூறி வருகிறார்.