நாடாளுமன்றில் கடந்த 20ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்ட தேசிய சபையின் நியமனங்கள் தொடர்பாக இன்று  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றில் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை இலங்கை பெற்றுக்கொள்ள முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக வெளிநாட்டு தூதுவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளனர்.

நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

உள்நாட்டுச் சந்தையில் புதிய எரிவாயு கொள்கலன்கள், எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி (திங்கட்கிழமை) ஜப்பான் செல்லவுள்ளார்.

அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகை தரும் போது அலுவலகத்திற்கு பொருத்தமான உடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்படவுள்ளது.

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி