பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை இலங்கை பெற்றுக்கொள்ள முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக வெளிநாட்டு தூதுவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளனர்.

கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியைப் பெறுவது தொடர்பில் ஜனாதிபதி வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (22) பிற்பகல் நடைபெற்ற இந்த சந்திப்பு இடம்பெற்றது.

பரிஸ் க்ளப் மற்றும் பரிஸ் க்ளப்பில் அங்கத்துவம் அல்லாத 23 நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்களை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அதற்கு தேவையான அனைத்து அர்ப்பணிப்புக்களை செய்து வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி