தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி தம் இன்னுயிரை ஈந்த போராளிகளையும் பொது மக்களையும் நினைவுகூருவதென்பது தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை உரிமையாகும். அந்த வகையில் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதியன்று தமக்காக மரணித்தவர்களை நினைவு கூருவதைத் தடுப்பதுதான் ஜனநாயக சோசலிச குடியரசு ஆட்சியாகுமா என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொற்றுநோய் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், உளவு பார்க்க இலங்கை பாதுகாப்பு படையினரால் சமீபத்தில் விடுவிக்கப்பட்ட ட்ரோன்களும் அதிக சக்தி வாய்ந்த ஜெட் விமானங்களும், தனிநபரின் உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளதாக, ஆறு மாதங்களுக்கு முன்னர்,  உலகின் வளர்ச்சியடைந்த நாடு ஒன்றின் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட தடை செய்யப்பட்ட ஒரு செயற்பாடு என தெரியவந்துள்ளது.

பிகார் சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அதன் 19 வேட்பாளர்களில் 12 பேர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

கொரோனா தொற்று ஏற்படுமென எண்ணி மீனை உட்கொள்வதற்கு பயப்பட வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டயானா கமகே மற்றும் அருணாச்சலம் அரவிந்தகுமார் ஆகியோருக்கு பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி பகுதியில் ஆசனங்களை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட் -19 தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யும் உரிமையைப் பெற்றுக் கொடுக்குமாறு பகவந்தலாவ ராகுல ஹிமி தேரர் தெரிவித்தார். இதற்கு ஜனாதிபதி ஆவண செய்ய வேண்டுமெனவும் அவர் கேட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில் பிரதேசத்தில் அண்மைக் காலமாக பொது மக்களின் காணிகளை அரசாங்கம் அவர்களுக்கு தெரியாமல் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளைக் கொண்டு அளந்து வருவதாக சட்டத்தரணியும் அம்பாறை மாவட்ட பொத்துவில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமாகிய முஷர்ரப் முதுனபீன் தெரிவித்தார்.

இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் அலைனா பீ ஸ்டெப்லிஸ் மின் உற்பத்தி நிலைய முதலீட்டுத் திட்டமொன்றை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளார். இதன் மூலம் அமெரிக்கா இந்நாட்டு எரிசக்தித் துறையில் நுழையும் முயற்சி உறுதி செய்யப்பட்டுள்ளது.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி