அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் அலைனா பீ ஸ்டெப்லிஸ் மின் உற்பத்தி நிலைய முதலீட்டுத் திட்டமொன்றை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளார். இதன் மூலம் அமெரிக்கா இந்நாட்டு எரிசக்தித் துறையில் நுழையும் முயற்சி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய (15) Sunday Times செய்தியின்படி கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் அலுவலகம் இரு அமெரிக்க நிறுவனங்களுக்காக ‘எதிர்பாரா திட்டங்களை’ அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளதுடன், அமைச்சர்கள் இந்த திட்டங்களை ஏற்றுக் கொள்ளவிருக்கிறார்கள். அந்த பத்திரிகை செய்தியின்படி, அமெரிக்காவின் New Fortress மற்றும் General Electric ஆகிய பிரபல நிறுவனங்கள் அவசர எரிசக்தித் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மின் உற்பத்தி நிலையங்களை (LNG) அமைக்க அமெரிக்கத் தூதுவர் அலைனா பீ ஸ்டிப்லிட்ஸ் ஆலோசனைகளை முன்வைத்துள்ளார்.

எரிசக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஒகஸ்ட் பொதுத் தேர்தலுக்கு முன்பு அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக இந்த மின் உற்பத்தி முதலீட்டுத் திட்டத்தை அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்தார். அதன்படி, இந்த திட்டத்தின் மூலம் அமெரிக்க அரசாங்கம் 1 கிலோவோட் மணி நேர மின்சாரத்தை ரூ.18.29க்கு அரசாங்க மின்சார சபைக்கு விற்பதற்காக 5 வருட ஒப்பந்தத்தில் ஒப்பமிடப்படவிருக்கிறது. அதன்போது 330 மெகாவோட் உற்பத்தி செய்யும் மின் நிலையத்தை அமைத்தல், உரிமைகொள்ளல் மற்றும் நடாத்திச் செல்லல் (BOO) என்ற அடிப்படையில் ஒப்பந்தத்தின் மூலம் அரசாங்கம் உடன்படுகிறது.

மறு உற்பத்தி செய்யக் கூடிய எரிசக்தி குறித்து பல்வேறு கதைகளைக் கூறி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் முந்தைய ரணில்- மைத்திரி அரசாங்கமும், தற்போதைய அரசாங்கமும் சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் எரிபொருள் மின் நிலையங்களை அமைத்து வருகின்றன.

இந்த பாரிய முதலீடுகளுக்கான விற்பனைப் பிரதிநிதியாக அமெரிக்கத் தூதுவர் செயற்படுகிறார். அதோடு, நிறுவனங்களின் இலாபங்களுக்காகவும், அவர்களுக்குக் கிடைக்கும் கமிஷன்களுக்காகவும் ஆட்சியாளர்கள் செயற்படுகிறார்கள்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web