ஜி-மெயில் முகவரி வைத்திருப்பவர்களுக்கு

புதிய எச்சரிக்கையை வெளியிட்டிருக்கிறது கூகுள் நிறுவனம்.

உலகம் முழுவதும் ஜி மெயில் முகவரியை சுமார் 150 கோடி பயனர்கள் வைத்திருக்கும் நிலையில், தங்களது  சேர்வரில் இடவசதியை அதிகரிக்கும் வகையில் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள்.
 
செப்டம்பர் 20 ஆம் திகதிக்குள் பயன்பாட்டில் இல்லாத மின்னஞ்சல் (இ-மெயில்) முகவரிகள் டிலீற் செய்யப்படலாம் என்று கூகுள் வெளியிட்டிருக்கும் எச்சரிக்கைத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த எச்சரிக்கைத் தகவலின்படி, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் திகதி முதல் பயன்பாட்டில் இல்லாத மின்னஞ்சல் முகவரிகள் டிலீற்செய்யும் பணிகள் தொடங்கப்படலாம்.
 
கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத ஜி மெயில் முகவரிகள் நீக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி