தேர்தல் வாக்களிப்புக்குப் பின்னர்

ஊரடங்கை பிரகடனப்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ள ப்பட்டுள்ளன. பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தேர்தல் காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்படுவார்கள் இவர்களுக்கு  தேவையான நேரத்தில் உதவுவதற்கு பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கை அறிவிப்பதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை 500 தேர்தல் பிரசார கூட்டங்கள் நாடாளவியரீதியில் இடம்பெற்றுள்ளன. இதன்போது எந்த வன்முறையும் இடம்பெறவில்லை, நீதியான சுதந்திரமான தேர்தலை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி