ஆறு வருடம் கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்கள் தமக்கான இடமாற்றத்தை வழங்மாறு கோரி மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள்.

யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று (18) ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டமானது, வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக இடம்பெற்று வருகின்றது.

இந்த போராட்டத்தின்போது அனுக்கிரகத்தை மேற்கோள் முடிந்தவரை சொந்த அனுபவம் வடக்கு மாகாண இடமாற்ற கொள்கையை அமல்படுத்த ஆசிரியர்களுக்கும் இடத்தில் சமவாய்ப்பு வழங்கு போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை தாங்கியவாறு, தமது போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

அதேநேரம், வடமாகாண ஆளுனர் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், இலங்கை ஆசிரியர் சேவை சங்க தலைவர் உட்பட மத்திய கல்வி அமைச்சர் ஆகியோருக்கு மகஜர் கையளித்துள்ளனர்.

அந்த மகஜரில் ஒரு பிரதேசத்தில் அல்லது கல்லூரியில் தொடர்ச்சியாக சேவையாற்றுவதற்கு மூலம் ஏற்படக்கூடிய ஒரு தலைமை ஆசிரியர் தொழிலுக்கு பாதிப்புகளை ஏற்படுவதனால் பல்வேறுபட்ட பிரதேசங்களை பல்வேறுபட்ட சமூக பொருளாதார மற்றும் கலாச்சார சூழல்களில் உள்ள கல்லூரிகளில் சேவைக்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு பல்வேறு அனுபவங்களைப் பெற்றுக் கொண்டு தமது திறனை விருத்தி செய்வதற்கும் சகல ஆசிரியர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும் தேசிய ஆசிரியர் இடமாற்ற கொள்கை சுற்றறிக்கை யின் பிரகாரம் இடமாற்றங்கள் இடம்பெறுவதில்லை.

ஆசிரியருடைய இடமாற்றத்தில் பாரபட்சம் காட்டப்படுகின்றது. அனைத்து ஆசிரியர்களும் இடம் மாற்ற காலப்பகுதியில் சம உரிமை வாய்ப்பு வழங்கப்படும் என்று கல்விச் சமூகம் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ள எதிர்காலத்தில் இன்னும் பாரிய சிக்கல்களை எதிர்கொள்ளது என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இடமாற்றம் தொடர்பாக தமக்கு உரிய தீர்வினை வழங்காவிடின், தேசிய ரீதியில் இந்த போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி