கொரோனா தடுப்பு மருந்து எனக்கூறி நாட்டு மருத்துவர் ஒருவர் வழங்கிய 'பாணி' ஒன்றை அருந்திய இலங்கை ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த கோவிட்-19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று (திங்கட்கிழமை) அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பியல் நிஷாந்த உட்பட இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் கொரோனா தொற்றுக்கு ஆகியுள்ளனர்.
அமைச்சர் வாசுதேச நாணயகார, ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் ஆகியோர் ஏற்கனவே கோவிட்-19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஞாயிற்றுக்கிழமையன்று (17ஆம் திகதி) அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பங்கேற்றிருந்த நிகழ்வொன்றிலும், கடந்த 14ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வருகை தந்திருந்த நிகழ்வொன்றிலும் கலந்து கொண்டார்.
நாட்டு மருத்துவர் தம்மிக்க பண்டார என்பவர் கொரோனா தடுப்பு மருந்து எனக்கூறி தயாரித்த பாணியை, சில வாரங்களுக்கு முன்னர் ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த அருந்தியிருந்த நிலையிலேயே, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனது மருந்தை அருந்தினால் வாழ்நாளில் கொரோனா பாதிப்பு ஏற்படாது என, அதனைத் தயாரித்த தம்மிக்க பண்டார கூறியிருந்தார்.
Banner image reading 'more about coronavirus'கொரோனா வைரஸின் பல்வேறு அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?கொரோனா வைரஸ்: உலகெங்கும் கோவிட்-19 பாதிப்பு எவ்வளவு?கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது கிடைக்கும்?கொரோனா சானிடைசர் தரமானதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?Banner'காளியின் மருந்து'கேகாலையைச் சேர்ந்த நாட்டு மருத்துவர் தம்மிக்க பண்டார, மேற்படி மருந்தை அவருக்கு காளியம்மன் கூறியதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்னர் தம்மிக்க பண்டாரவின் மருந்து தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் விமல் வீரவன்ச "அந்த மருந்தை அவருக்கு காளியம்மன் கூறியதாகச் சொல்லியுள்ளார். மருந்து சரியாக இருந்தால் அதனை ஏற்க வேண்டி ஏற்படும். காளியம்மனை விஞ்ஞானத்தில் தேட முடியாது," எனத் தெரிவித்தார்.

தம்மிக்க பண்டாரபட மூலாதாரம்,DHAMMIKA BANDARA FACEBOOK PAGEஇது இவ்வாறிருக்க, கடந்த மாதம் அனுராதபுரத்திலுள்ள பௌத்த விகாரையொன்றில் தனது மருந்தை வைத்து பூஜை செய்வதற்குச் சென்ற தம்மிக்க பண்டாரவுக்கு அதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து அங்குள்ள பிரதம பௌத்த பிக்குவைச் சந்தித்துப் பேசிய தம்பிக்க பண்டார தான் காளி தெய்வம் என ஆவேசத்துடன் கூறினார்.

"உலக மக்களை பாதுகாப்பதற்காகவே இந்த மருந்தைத் தயாரித்தேன். நான் காளி என்பதை நீங்கள் அறிவீர்கள். எனது மருந்தை ஏன் அவமதித்தீர்கள். நான் காளி, உங்களின் அன்னை" என, பிரதம பௌத்த பிக்குவைப் பார்த்து தம்மிக்க பண்டார அதன்போது தெரிவித்தார்.

தம்மிக்க பண்டார தயாரித்த இந்தப் பாணத்தை, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஆகியோரும், ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் பருகியிருந்தனர். அதன்போது எடுக்கப்பட்ட படங்கள் ஊடகங்களில் வெளியாகி இருந்தன.

இதேவேளை, தம்மிக்க பண்டாரவின் மருந்தை பெற்றுக் கொள்வதற்காக அவரின் வீட்டுக்கு முன்னால் பல்லாயிரக் கணக்கானோர் ஒரே நேரத்தில் கூடியமையும் நினைவுகொள்ளத்தக்கது. அப்போது பொதுமக்களுக்கு தனது மருந்தை தம்மிக்க பண்டார பகிர்ந்தளித்தார்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிபடக்குறிப்பு,சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி
இந்த நிலையில், தம்மிக்க பண்டாரவின் தயாரிப்புக்கு மருத்துவ பானமாக அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளபோதும், கொரோனா எதிர்ப்பு மருந்தாக அங்கிகாரம் வழங்கப்படவில்லை என, ஆயுர்வேத ஆணையாளர் தெரிவித்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

"காளியம்மனைப் பற்றி பேசுவதைக் கைவிட வேண்டும்"இது இவ்வாறிருக்க, நாட்டு வைத்தியர் தம்மிக்க பண்டார, தனது பாணி மருந்தைப் பற்றிப் பேசும் போது, அதற்குத் துணையாக காளியம்மனைப் பற்றிப் பேசுவதைக் கை விட வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சில வாரங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

"கொரொனாவுக்கு 'பாணி மருந்து' கண்டு பிடித்துள்ளதாக, சில அமைச்சர்களால் மகிமைப் படுத்தப்பட்டு ஓடித்திரியும் 'பாணி தம்மிக' என்ற நாட்டு மருத்துவரை சில பௌத்த பிக்குகள், 'தேசிய மோசடிக்காரன்' என்கிறார்கள். சிலர், 'தேசிய வீரன்' என்கிறார்கள்."

"எனக்கு இதில் அக்கறை இல்லை. ஆனால் இவர் இந்து கடவுளான காளியம்மனைப் பற்றி பேசுவதை உடன் நிறுத்த வேண்டும். நான் இந்த - நாட்டு வைத்தியரின் 'பாணி மருந்தை' இதுவரை குடிக்கவில்லை. இனிமேல் குடிக்கும் எண்ணமும் இல்லை. எனது பிரச்னை - இந்த 'பாணி தம்மிக' என்ற நாட்டு வைத்தியர், தனக்கு துணையாக இந்து கடவுள் காளியம்மனை பெயரிட்டுள்ளமையாகும். இவர் தனக்கு காளியம்மன் அருள் பாலித்திருப்பதாக கூறுகிறார். அதனால், இந்த நபரை எதிர்த்து கருத்து வெளியிடுவோர், காளியம்மனையும் சேர்த்து விமர்சிக்கிறார்கள்."

மனோ கணேசன்"காளியம்மனை இதில் இழுத்து விடுவது நிறுத்தப்பட வேண்டும். காளியம்மன், பார்வதி தேவியின் அவதாரம். பார்வதி, இந்துக்களின் மூத்த தாய்க்கடவுள்," எனவும் மனோ கணேசன் தெரிவித்திருந்தார்.

கொரோனா வைரஸ் நிலவரம்இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் தொகை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்கிறது.
இன்று செவ்வாய்கிழமை காலை 6.00 மணி வரையில், 53,750 பேர் கொவிட் தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்திருந்தது. இவர்களில் 45,820 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் 270 பேர் கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் மரணமடைந்துள்ளனர்.
இலங்கையில் கொரோனா காரணமாக மரணிப்போரின் சடலங்கள் தொடர்ந்தும் தகனம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

BBC

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி