ஒருவரின் பாலியல் தன்மை இன்னொருவருக்கு பிரச்சினையாக இருக்கக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கூறுகிறார்.இலங்கையில் பல்வேறு பாலியல் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக பேசும் ' Faculty of Sex' உரையாடலில் பங்கேற்றபோது அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக நியமிக்கப்பட்ட நிபுணர்களின் குழுவின் ஆலோசனையின் பேரில் கொவிட் தொற்றால் மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என சுகாதார இராஜங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புல்லே தெரிவித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் பங்களிப்புடன் கிழக்கிலிருந்து வடக்கே பயணித்த சமாதான ஊர்வலத்தை நீதிமன்றத் தடைகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஊடாக அச்சுறுத்தி தடுக்க இயலாது, ஆத்திரமடைந்த அரசாங்கம் பங்கேற்பாளர்களை சிறையில் அடைத்து, அவர்களது வாகனங்களை கைப்பற்ற முடியுமென பகிரங்கமாக அச்சுறுத்தியுள்ளது. 

சர்வதேச மற்றும் உள்ளூர் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட  விருது பெற்ற எழுத்தாளர் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.”அர்த" என்ற பெயரில் இணையத்தில் சிறுகதையை வெளியிட்டு பௌத்தத்தை அவமதித்ததாக தெரிவித்து எழுத்தாளர் சக்திக சத்குமார சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனத்தின் கீழ்  2019 ஏப்ரல் முதலாம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இலங்கையில் பெரும்பான்மையானவர்கள் பாலினசேர்க்கையை அசிங்கமாக கருதுவது தீவிரமான விஷயம் என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீ​ கூறுகிறார்.

போருக்குப் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் இருக்கின்ற வேலை தனியார் முதலீட்டாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட நிலங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை அரசாங்கம் பெறவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

இலங்கையின் மனித உரிமைப் பதிவு ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 12 நாட்களில் பரிசீலிக்கப்படவுள்ள நிலையில் கொவிட் தொற்றினால் மரணித்த  உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அரசுக்கு எதிரான விஷம கருத்துகளை பதிவிடுவதாகக் கூறி ஆயிரத்துக்கும் அதிகமான கணக்குகளை முடக்குமாறு ட்விட்டர் நிறுவனத்தை கேட்டுக் கொண்டிருந்த மத்திய அரசுக்கு அந்த நிறுவனம் பதில் அனுப்பியிருக்கிறது.

நேற்று நாடாளுமன்றத்தில் COVID 19ஆல் உரிழப்பவர்களை மண்ணில் புதைக்கும் போது,  நீருடன் வைரஸ் கலக்குமா? என்ற வினா எழுப்பப்பட்ட போது " இல்லை. அப்படிப் பரவாது" என பதிலளித்திருந்தார் இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்சனி.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி