இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பத்தை பத்ரமுல்ல சீலரத்ன தேரர் கையளித்துள்ளார்.

காணாமல்போன தனது மகனைத் தேடியலைந்து போராடி நீதி கோரி வந்த தாயொருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.வவுனியா மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி (வயது-61) என்ற தாயாரே நேற்று செவ்வாய்க்கிழமை மரணமானார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இறுதி அறிக்கை நேற்று வெளியிடப்பட்டதன் பிற்பாடு விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

உயிர்த்த ஞாயிறு  தாக்குதலுடன் தொடர்புபட்டதாக கூறப்பட்ட நபரொருவரை பற்றி அறிந்து கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இராணுவ தளபதிக்கு தொலைபேசி மூலம் அழைப்பொன்றை எடுத்து உதவி பெற முயற்சித்ததாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இலங்கையில் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறித்து பேசுவதற்கான வாய்ப்பை தடுத்ததாக எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் மீது குற்றச் சாட்டை முன்வைத்துள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தனது அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய பரிந்துரைத்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாரம்பரிய ஏற்றுமதிப் பொருட்களுக்கு மேலதிகமாக தண்ணீரை ஏற்றுமதி செய்யும் பட்சத்தில் அதிக வௌிநாட்டுச் செலாவணியை பெற முடியுமென்பதால், தண்ணீரை ஏற்றுமதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 2024 இல் நிரந்தர அரசாங்கம் அமைக்கப்படும் என்று ஐ.தே.க தெரிவித்துள்ளது. முன்னாள் உள்துறை மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி