போருக்குப் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் இருக்கின்ற வேலை தனியார் முதலீட்டாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட நிலங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை அரசாங்கம் பெறவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

 திருகோணமலை மாவட்டத்தில் உள்ள குச்சவெலி பிரதேச செயலக பிரிவில் உள்ள காணிகள் பல்வேறு நபர்கள் மூலமாக முதலீட்டிற்காக தொழிலதிபர்களுக்கு ஒப்டைக்கப்பட்டிருந்தும் அந்த காணிகளினூடாக 68 கோடி ரூபா அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

பிப்ரவரி 9 செவ்வாய்க்கிழமை அமைச்சக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் எஸ். எம். சந்திரசேன இதை வெளிப்படுத்தியுள்ளார்.

குச்சவெலி பிரதேச செயலக, கிழக்கு (240 பி) கிராம நிலதாரி பிரிவு திருகோணமலை புல்மோட்டை பிரதான வீதி, இரக்கண்டி பாலம் மற்றும் சலபே ஆரு பாலம் பிரதான வீதியில் கடற் கரையோரப் பகுதியிலுள்ள நிலங்களை பெற்றுக்கொண்ட பயனர்களிடமிருந்து மட்டும் செலுத்த வேண்டிய வரி ரூ .17 பில்லியன் ஆகும் என அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு தகவல் துறை அவர்களின் விபரங்களை வெளியிடவில்லை.

லட்சக்கணக்கான நிலமற்ற மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படும், மேலும் இந்த ஆண்டு 150,000 நில பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எஸ்.எம். சந்திரசேன இங்கு தெரிவித்தார்.

யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினர் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ள நிலங்களை விடுவிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சரோ அரசாங்க தகவல் திணைக்களமோ இது வரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.

அரசாங்க புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மைக்கேல் பேச்லெட், ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், வடக்கு மற்றும் கிழக்கில் கிட்டத்தட்ட 90 சதவீத இராணுவ வசம் உள்ள நிலங்கள் திரும்பப் பெறப்பட்டதாகக் கூறினார்.

2009 ல் கைப்பற்றப்பட்ட அரசு நிலங்களில் 89.26 சதவீதமும், தனியார் நிலங்களில் 92.22 சதவீதமும் 2019 டிசம்பர் 31 க்குள் திருப்பி பெறப்பட்டுள்ளதாக என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களை ஏற்க மறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நா.உ சிவஞானம் ஸ்ரீதரன் சமீபத்தில் உயர் ஸ்தானிகரின் அறிவித்த திகதியிலிருந்து ஒரு வருடத்திற்கும் மேலாக, முப்படைகளாலும் ஆக்கிரமிக்கப்பட்ட 8,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் உரிமையாளர்களுக்கு திருப்பிக்கொடுக்கப்படவில்லை. ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் இன்னமும் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களை கொன்றுள்ளதாகவும் கிளிநொச்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கூறினார்.

ஆகவே, இவ்வளவு பெரிய அளவில் நிலங்கள் பறிமுதல் செய்யப்படும்போது, ​​அரசாங்கத் தகவல்களின் அடிப்படையில் ஒரு திட்டத்தை உருவாக்கி அவர்களுக்கு காணி உத்தரவுப் பத்திரத்தை வழங்கவில்லை.இதுதான் 2015 இல் நடந்தது. அரசாங்கம் முன்னேற்றம் கண்டிருப்பதாக கூறுகிறது ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அரசாங்க நிலங்கள் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளால் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளனதாகவும் உரிய இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என. எம்.எஸ் சந்திரசேன தெரிவித்துள்ளதாக அரசு தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நிலம் இல்லை

வடக்கில் யுத்தம் முடிவடைந்து கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் அகதி முகாம்களில் வசித்து வருவது சமீபத்தில் தெரியவந்தது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இடம்பெயர்ந்தோர் நல மையங்களில் உள்ள 409 குடும்பங்களில் 233 நிலமற்ற குடும்பங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.

பிப்ரவரி 1 திங்கள் அன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி