நேற்று நாடாளுமன்றத்தில் COVID 19ஆல் உரிழப்பவர்களை மண்ணில் புதைக்கும் போது,  நீருடன் வைரஸ் கலக்குமா? என்ற வினா எழுப்பப்பட்ட போது " இல்லை. அப்படிப் பரவாது" என பதிலளித்திருந்தார் இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்சனி.

சுதர்சனியின் பதிலை அடிப்படையாக வைத்து " அப்படியாயின் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படுமா" என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரைக்கார் இன்று (10) தொடுத்த வினாவிற்கு " ஆம், ஆம் வழங்கப்படும்" என பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதில் வழங்கியுள்ளார்.

ஐ.நா. உயர் ஸ்தானிகர் மைக்கல் பேச்லெட்டின் அறிக்கைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், ஐ.நா. மனித உரிமை வல்லுநர்கள் குழு கொவிட் 19 தொற்றால் மரணித்தவர்களின் உடல்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்யும் அரசாங்கத்தின் கொள்கையை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கை ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் 2021 பெப்ரவரி 22 முதல் மார்ச் 23 வரை மதிப்பாய்வு செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி