இஸ்லாமியர்களின் உடல்களை நல்லடக்கம்  செய்வது சம்பந்தமாக பிரதமரினால் விசேட குழுவொன்று நியமிக்கப்படுள்ளது என theleader.lk யினூடாக ஏப்ரல் 03 பிரசுரித்த செய்திக்கெதிராக குற்றப்புலனாய்வுத்திணைக்கலத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் வாரம் அமெரிக்கர்களுக்கு மிகவும் கடினமான மற்றும் சோகமான வாரமாக அமையும் என்று அந்நாட்டின் பொது சுகாதார சேவைப்பிரிவின் தலைவர் ஜெரொமி ஆடம்ஸ் எச்சரித்துள்ளார்.

நாடு முகம் கொடுத்திருக்கும் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப் படுத்துவதற்கு சுகாதார,வைத்திய,பாதுகாப்பு பிரிவுகள் மற்றறும் விசேட பிரிவினருடன் ஆராய்ந்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

49 வது ஏப்ரல் வீரர்கள் நினைவு தினமான இன்று 5 மக்கள் விடுதலை முன்னணியின் நேரடி நிகழ்ச்சி காலை 10 மணிக்கும் மு.சோ.க நேரடி ஒளிபரப்பு பி.ப 3 மணிக்கும் face book இல் ஒளிபரப்பப்படவுள்ளது.

இலங்கை உட்பட முழு உலகமும் covid 19 கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு முகம் கொடுத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அரசின் முடிவுகளுக்கு ஏற்ப செயற்படுமாறும் வீட்டில் இருக்குமாறும் வீட்டில் இருப்பவர்களுக்கு அல்லாஹ் உதவி செய்வான் எனவும் இதுவே இஸ்லாமியர்களின் நம்பிக்கை எனவும் இலங்கை வகுப் நிர்வாக குழு உறுப்பினரும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை செயற்குழு உறுப்பினருமான மௌலவி எம்.அக்ரம் நூராமித் கூ றியுள்ளார்.

Covid 19 வைரஸ் கட்டுப்படுத்துவது சம்பந்தமாக முழு இலங்கையையும் LOCKDOWN செய்வது சம்பந்தமாக சமூகஊடகங்களில் வரும் செய்திகள் முற்று முழுதான பொய் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த கஸ்ட்டமான நேரத்தில் பாரளுமன்றத்தை விரைவாக கூட்டுமாறு ஜனாதிபதி சட்டத்தரனி மைத்ரி குணரத்ன அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துச் செல்கின்றது கொரோனா வைரசின் முதல் நோயாளி கண்டு பிடிக்கப்பட்டதிலிருந்து இது வரைக்கும் 162 பேர் இலங்கையில் கொரோனா தொற்றுக்குல்லாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் வைத்தியர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் திணைக்களத்தின் தலைவர் ஏப்ரல் 01ம் திகதி ஜனாதிபதியின் செயலாளர் டி.பி ஜயசுந்தரவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக்கடிதத்தில் பாராளுமன்றத்தை மார்ச் 02 ம் திகதி கலைத்ததிலிருந்து 03 மாதங்களுக்கு பிறகு பாராளுமன்றத்தை கூட்டுவது சம்பந்தமாக ஆராய்ந்து வருவதாக தெரிய வருகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் இறுதிக் கிரியைகளை செய்வது தொடர்பாக நிபுணத்துவம் மிக்க குழுவொன்றை நியமிக்க வேண்டும் என சுகாதார அமைச்சில் நேற்று (3) இடம்பெற்ற சந்திப்பின் போது வைத்தியர்கள் சங்கம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக இன்று (4) உயிரிழந்துள்ளார் ஆண் நோயாளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தங்களது பாதுகாப்பிற்கான அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுகதார அமைச்சிற்கு 2 வார கால அவகாசம் வழங்கியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

COVID 19 வைரசால் தொளிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர் அரசாங்கம் இப்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை மூடி மறைத்து நாட்டில் உணவு உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருப்பதானது இந்த நிலையை மூடி மறைத்து மக்களை வேறு வழியில் திசை திருப்புவதற்காகும்.

மலேசியாவில் கொரோனா வைரஸ் நிலவரம்:பல்வேறு நாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் மலேசியர்களால் உள்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் புதுடெல்லியில் நடைபெற்ற சமய நிகழ்வில் பங்கேற்ற மலேசியர்களைத் தேடி வருவதாக அரசு அறிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி