முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான

குற்றச் செயல்களை விசாரித்து, அவருக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

பிரித்தானிய பிரஜையான டயனா கமகே இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்தமை தொடர்பில் விசாரணைகள் மற்றும் விசாரணைகளில் வெளிவரும் குற்றவியல் விடயங்கள் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரினார்.

டயானா கமகே  போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்தமை, அரசியலமைப்பை மீறியமை, தேர்தல் சட்டங்களை மீறியமை, போலி ஆவணங்களை நகல்  ஆவணங்கள் போன்று  சமர்ப்பித்தமை போன்ற பல குற்றச் செயல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி