காணாமல்போன ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி
பயணித்த ஹெலிகொப்டரின் சிதைவுகளை தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட ஆளில்லா விமானம் கண்டுபிடிக்க முடிந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் மலைப் பகுதியில் தற்போது 73 குழுக்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
அடர்ந்த பனிமூட்டம் பணிகளுக்கு இடையூறாக உள்ளது. இந்த அடர்ந்த பனிமூட்டம் காரணமாகவே ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
ஈரானிய செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, துருக்கியிலிருந்து பெறப்பட்ட ஆளில்லா விமானம் ஹெலிகொப்டரின் சிதைவுகளைக் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.