தங்களது பாதுகாப்பிற்கான அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுகதார அமைச்சிற்கு 2 வார கால அவகாசம் வழங்கியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் ( PHI ) இன்று 4 சனிக்கிழமை ஆரம்பிக்கவிருந்த வேலை நிறுத்தத்தை காலம் தாழ்த்தியுள்ளனர் அடிப்படை சுகாதார வசதிகள் ஒன்றும் தமக்கு வழங்கப்படவில்லை என்பதை முன்வைத்து வேலை நிறுத்தம் ஒன்றை செய்யவிருந்தனர் ஆனால் கடந்த 2 ம் திகதி சுகாதார அமைச்சில் இடம் பெற்ற பேச்சு வார்த்தையை அடுத்து 2 வாரகாலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 4ம் திகதி ஏற்பாடு செய்திருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ஜி.யு ரோகன ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது முன்வைக்கப்பட்ட 4 கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளதாகவும் நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு மேலும் 2 வாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ஜி.யு ரோகன தெரிவித்துள்ளார்.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ஜி.யு ரோகன மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கிடையில்  நடந்த சந்திப்பில் செயலாளர் ஒரு மாத கால அவகாசம் கேட்டுள்ளார் இதன்போது சங்கத்தின் தலைவர் எம்.ஜி.யு ரோகன சங்கத்தின் சார்பாக 2 வாரகால அவகாசம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி