சவூதி அரேபியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்தான எழுத்துமூல கடிதமொன்றை நேற்று பெற்றுக்கொண்டதாக சவூதி ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை, அடுத்த இரண்டு வாரங்களில் திருத்தம் செய்யப்படும் என வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சர்களான பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோரை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள தமது அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உப தலைவர்களை கொழும்புக்கு அழைத்து கலந்துரையாடல்களை நடத்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

இன்று (28) மின்வெட்டு நேரத்தை ஒரு மணித்தியாலம் வரை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகிய எரிபொருட்கள் போதியளவு கையிருப்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ), எரிபொருள் தட்டுப்பாடு குறித்த தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

X-Press Pearl கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக மேலும் 9110 இலட்சம் ரூபா இழப்பீடு கிடைத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

மேலதிகமாக உள்ள எரிபொருளை எதிர்வரும் 03 நாட்களுக்குள் நாடு முழுவதும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். 

நிர்மாணத்துறைக்கு தேவையான பல பொருட்களின் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால், அத்துறை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேசிய நிர்மாணத்துறை சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்தார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி