ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி

மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்ரஹீன் மற்றும் பல அரசு அதிகாரிகள் பயணித்த   ஹெலிகொப்டர் விபத்தில் அவர்கள் அனைவரும் உயிரிழந்ததாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

செஞ்சிலுவைச் சங்கத்தின் மீட்புக் குழுவினர், அஜர்பைஜான் மற்றும் ஈரான் எல்லையில் உள்ள மலைப் பகுதியில் காணாமல்போன ஹெலிகொப்டரின் சிதைவுகளைக்  கண்டுபிடித்தனர், மேலும் அடர்ந்த மூடுபனி காரணமாக ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று அவர்கள் ஊகித்தனர்.

விபத்தின் போது, ஈரானிய ஜனாதிபதி ரைசி மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அமீர் அப்துல்ரஹீன் ஆகியோருடன் அண்டை நாடான அஜர்பைஜானிலிருந்து வடமேற்கு நகரமான தப்ரிஸுக்கு ஹெலிகொப்டர்  திரும்பிக் கொண்டிருந்தது.

63 வயதான ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சமீப காலங்களில் அதிகம் பேசப்படும் தலைவர்களில் ஒருராகக் காணப்பட்டார். ரைசியா சமீபத்தில் உமா ஓயா திறப்பு விழாவில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி