ஈரான் தூதுவர் கலாநிதி ஏ டெல்கோஷை தாக்கி விபத்தை
ஏற்படுத்திய வர்த்தகர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக கொம்பனி வீதி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் உள்ள வர்த்தக நிலையமொன்றின் வாகன நிறுத்துமிடத்துக்குள் தூதுவர் பிரவேசித்தபோது, மற்றுமொரு காரின் சாரதியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அந்த நபர் தூதுவரை தாக்கி அந்த இடத்தை விட்டு தப்பிச் செல்ல முற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பைச் சேர்ந்த 33 வயதான வர்த்தகராவார்.