COVID 19 வைரசால் தொளிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர் அரசாங்கம் இப்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை மூடி மறைத்து நாட்டில் உணவு உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருப்பதானது இந்த நிலையை மூடி மறைத்து மக்களை வேறு வழியில் திசை திருப்புவதற்காகும்.

பல்தேசிய கம்பனிகளின் நஷ்டத்தை தவிர்ப்பதற்காக 400 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு வங்கிகளின் மூலம் அதை பெற்றுக்கொள்வதற்கு வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

COVID  19 வைரஸ் காரணமாக இப்போது உலகப்பொருளாதாரம் இறுதித்தருவாயில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்த உலகப்பொருளாதாரச்சரிவினால் இலங்கையும் பாரிய இழப்பை சந்தித்துள்ளது.

மத்திய வங்கி ஆளுனரின் கருத்து

நாட்டின் வெளிநாட்டுப்பங்குகளின் வியாபாரம் சரிந்துள்ள நிலையில் மத்திய வங்கி வெளிநாட்டு நிதி நிறுவனங்களை இலங்கை வங்கிகளில் முதலீடு செய்யுமாறு அழைத்துள்ளது. இதன்போது அவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என்று மத்தியவங்கி அறிவித்துள்ளது தற்போது நாட்டின் நிலைமை இப்படி இருக்கையில் அரசாங்கம் எதை எதையோ கூறுகின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி