உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகமாக இருக்கும் முதல் 5 நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, ஹஷாந்த குணதிலக்க மற்றும் கல்வல சிறிதம்ம தேரர் ஆகியோரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அனுமதி கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (சிபெட்கோ) தொழிற்சங்கங்கள், இன்று (22) எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வர்த்தக அமைச்சருடன் இன்றைய தினம் (22)  கலந்துரையாடவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் இருவரை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பட்சத்தில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் (TID) ஒப்படைக்குமாறு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

நாட்டில் நாளைய தினம்(22) 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அரசியலில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த 03 மாதங்களில் இலங்கையில் இருந்து 208 விமானங்கள் இந்தியாவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு விமான எரிபொருளைப் பெற சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தை எதிர்கொண்ட நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல நடிகர் ஜெக்சன் அந்தனியை பார்ப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இன்று சென்றிருந்தார். 

நாடளாவிய ரீதியில் நாளையும் (20) நாளை மறுதினமும் (21)  நாளாந்தம் 3 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி