வடமேல்  ஆளுநர் நசீர் அஹமட்டின்

உத்தியோகபூர்வ இல்லம் மற்றும. அரசாங்கத்தின் ஏனைய மூன்று உத்தியோகபூர்வ இல்லங்களால் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குருணாகல் ஆற்று சுற்றுவட்டத்தில் அமைந்துள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லம், அதே சுற்று வட்டத்தில் அமைந்துள்ள குருணாகல் மேயரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வடமேற்கு விவசாய அமைச்சின் உத்தியோகபூர்வ இல்லம் என்பனவற்றை அவர் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் வடமேல் மாகாண ஆளுநராக இருந்த லக்க்ஷ்மன் யாப்பா அபேவர்தன பல அரச அலுவலகங்களை இவ்வாறு பயன்படுத்தியதாகவும் அவருக்கு முன்னர் இருந்த ஆளுநர்கள் எவரும் தமது உத்தியோகபூர்வ இல்லம் தவிர்ந்த ஏனைய அரச அலுவலகங்களை இவ்வாறு பயன்படுத்தியதில்லை எனவும் மாகாண சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லம், ஆளுநரின் தனிப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்குப் போதியளவில் தயார் நிலையில் இருந்த போதிலும், ஏனைய அரச இல்லங்களை இவ்வாறு பயன்படுத்துவது அரசாங்கப் பணம் மற்றும் வளங்களை தவறாகப் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....