சர்வதேச நாணய நிதிய பணியாளர்கள் மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையில் சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF)  வழங்குவதற்கான பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட 16 பேரை கொலை செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த அப்போதைய கம்பஹா பொலிஸ் அத்தியட்சகர் லக்‌ஷ்மன் குரே மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என கூறப்படும் 'மொரிஸ்' என்றழைக்கப்படுகின்ற செல்வராஜா கிருபாகரன் ஆகியோர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் 2ஆம் தவணை விடுமுறைக்காக செப்டெம்பர் 7ஆம் திகதி மூடப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட 28 பேரும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துக்கு (IMF) இடையில், அவசரகால கடன் வழங்குவதற்கான ஆரம்ப உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

முன்னதாக சுயேட்சையாக இருந்த 12 SLPP பாராளுமன்ற உறுப்பினர்கள் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் எதிர்கட்சிக்கு மாறினர்.

2022 திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட யோசனைகள் தொடர்பாக இன்று(31) முதல் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை(02) வரை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்களிடம் தற்போதுள்ள கோதுமை மா இருப்பை சந்தைக்கு விநியோகிக்குமாறு எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றை விடுக்கவுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளை உள்ளடக்கியதாக இருந்த சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவராக பதவி வகித்த மிக்கைல் கோர்பசேவ் காலமானார்.

இலங்கையைச் சூழவுள்ள பிரதேசங்களில் ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை உருவாகக் கூடிய கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனவே, நாட்டின் தென் அரைப்பாகத்தில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கோழி தீவனத்திற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை, 48 வகையான பொருட்களின் உற்பத்தி, களஞ்சியப்படுத்தல் மற்றும் விற்பனை தொடர்பில் பல நிபந்தனைகளை விதித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிடப்பட்டுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி