ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 23ஆம் திகதி சர்வகட்சிக்குழு மாநாடு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ள நிலையில் அதில் பங்கேற்பது குறித்தும் பிரதான கட்சிகள் பலவும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றன.


“வடக்கு மக்களை நாம் மறக்கவும் மாட்டோம் கைவிடவும்மாட்டோம்.” என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.யாழ்ப்பாண விசேட பொருளாதார மத்தியநிலையத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார். 


இன்று (20) பிற்பகல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கடவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் பெறுவதற்காக வரிசையில் நின்ற 70 வயதான முச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உணவகங்களில் பால் தேநீர் விநியோகமும் இடைநிறுத்தப்பட உள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

ரட்டே ரால  தொடர்ச்சியாக அரசாங்கத்தினுடைய உட்பூசல் தொடர்பில் கதைத்து வந்தார்.மீண்டும் கதைக்குமளவுக்கு  உண்மையில் ஒன்று சேர்ந்த காரணங்கள்  உள்ளன.

பல தசாப்தங்களாக சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மலையகத் மக்களின் மீது அதிக கவனம் செலுத்துமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்படி, இலங்கை மீது செல்வாக்கு செலுத்த சர்வதேச நாடுகளிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கைகளை முன்வைக்க ஆரம்பித்துள்ளது.


இலங்கையின் பொருளாதார ஸ்தீரத்தன்மை மற்றும் கடன்களில் இருந்து மீள்வதற்கு நம்பகமான மற்றும் பொருத்தமான மூலோபாயத்தை செயற்படுத்துவதற்காக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க சர்வதேச நாணய நிதியம் தயாராகவுள்ளது என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெர்ரி ரைஸ் தெரிவித்துள்ளார்.


இலங்கை ரூபாவின் பெறுமதி வேகமாக வீழ்ச்சியடைந்தமைக்கான காரணங்களை முன்னாள் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் நாட்டு மக்கள் வெளிப்படையாக விமர்வித்து வருகின்றனர்.

நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவிவருவதையடுத்து மக்கள் தமது அத்தியவசிய தேவைகளுக்கு வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டது.ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றும் மட்டத்தில் போமாக உள்ளனர்.

யுக்ரேன் - ரஷ்ய  முரண்பாடு உலகமட்டத்தில் ஒரு பேரவலமாக மாறிவிட்டது. இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின்னர் அதிகமான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தது இந்த சந்தர்ப்பமாகும்.

=“ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்த போதிலும், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடும் எமது அரசியலை அவருக்கு சாதகமாக பயன்படுத்த முடியாது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக கூறியுள்ளது.

75,000 ரூபாய்க்கும் குறைவான மாத வருமானம் உள்ள குடும்பங்களுக்கு 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கான திட்டத்தை தயாரிப்பதற்கான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள தொழிலாள வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு அமைய மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் விரைவில் பதவி விலகுவார் என வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி