ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக ஊடக செயற்பாட்டாளரும், பல்கலைக்கழக மாணவருமான திசர அனுருத்த பண்டார, முதலில் காணாமல் போய் உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் முகத்துவார காவல்நிலையத்தின் குற்ற விசாரணை பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டனர்.

இலங்கையர்களுக்கு அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது, இது ஜனநாயக வெளிப்பாட்டிற்கு அவசியமானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு சாதகமான பதில்!இலங்கை நிதியுதவி வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை வெகுவிரைவில் ஆரம்பிக்கவிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

மின் உற்பத்திக்காக இலங்கை மின்சார சபைக்கு (CEB) 6000 மெட்ரிக் தொன் எரிபொருளை வழங்க Lanka IOC நிறுவனம் முன்வந்துள்ளது.

அவசரகால பிரகடனத்தை உடனடியாக மீளப் பெற வேண்டும் - சுமந்திரன் ஜனாதிபதி, அவசரகால பிரகடனத்தை உடனடியாக மீளப் பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக நேற்று இடம்பெற்ற மக்கள் போராட்டம் தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

ஏப்ரல்  01ஆம் திகதி  முதல் அமுலாகும் வகையில் இலங்கையில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.ஏப்ரல்  01ஆம் திகதி  முதல் அமுலாகும் வகையில் இலங்கையில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும்  3 ஆம் திகதி ஞாயிறன்று  ஊரடங்கு உத்தரவு அமுல் செய்யப்படலாம் என பரவலாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மிரிஹான பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் சட்டத்தரணி  சுபுன் ஜயவீர வீரகேசரிக்கு தெரிவித்துள்ளார்.


எதிர்ப்பு அமைதியாக இருந்தால் மட்டுமே வலுவாக இருக்கும் என்று உண்மையான தேசப்பற்றாளர் மையம் வலியுறுத்துகிறது.

நுகேகொடை, மிரியானவில் உள்ள கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு அருகில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் தாக்குதல் நடத்தியதையடுத்து பல பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

மிரிஹானவில் அமைந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டுக்கு அருகில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

 நல்லிணக்க கோரிக்கைகளை நிறைவேற்றுவதைப் போல கூறிக்கொண்டு, தமிழ் மக்களின் நீண்ட கால முயற்சிக்குப் பின்னர் தற்போது ஐ.நாவில் முன்னெடுக்கப்படும் நீதி பொறிமுறையை தவிடுபொடியாக்க இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இடமளிக்கக் கூடாதென டெலோ(TELO) எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹாலிவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி