ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 23ஆம் திகதி சர்வகட்சிக்குழு மாநாடு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ள நிலையில் அதில் பங்கேற்பது குறித்தும் பிரதான கட்சிகள் பலவும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றன.


இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டில் மக்கள் விடுதலை முன்னணி பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போது தெரிவித்தார்.


இரண்டு முக்கிய அமைச்சர்கள் நீக்கப்பட்டதையடுத்து அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள அரசியல் முரண்பாடுகளை தொடர்ந்து அரச தலைவருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் விளைவே சர்வ கட்சி மாநாடு கூட்டப்படுவதற்கு காரணம் என அவர் தெரிவித்தார்.


” இந்த அரசுக்கு மக்கள் தொடர்பில் துளியளவும் அக்கறை இல்லை. பிரச்சினைகளை தீர்ப்பதற்கான திட்டங்களும் இல்லை. எனவே, ஏமாற்று வேலையாகவே சர்வக்கட்சி மாநாடு நடத்தப்படுகின்றது. அவ்வாறான ஏமாற்று பொறிக்குள் எமது கட்சி சிக்காது.” – என்றும் அநுர திஸாநாயக்க குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடி மோசமடைந்ததையடுத்து அரசாங்கம் சர்வ கட்சி மாநாட்டை கூட்டியுள்ளதாகத் தெரிவித்த ஜே.வி.பி.யின் தலைவர், நெருக்கடி நிலைமைக்கு ஒன்றிணைந்த பிரேரணையை ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் கோரியிருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான விடயங்களை கருத்திற் கொண்டு மாநாட்டை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி மாநாடு நடைபெறும் 23ஆம் திகதி மக்கள் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றுக்கு அனுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டுமாயின் இறைமை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.அதனை சர்வகட்சிகளின் மாநாட்டில் சுமந்திரனுடன் பங்கேற்று வலியுறுத்துவேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், விசேடமாக தமிழ் மக்கள், மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளையும் எடுத்துக்கூறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்று ஒட்டுமொத்தமான மக்களின் வெறுப்பினைச் சந்தித்து வீழ்ச்சி கண்டுள்ள ராஜபக்ஷக்களுக்கு உயிர்கொடுக்க முடியாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்தரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இனப்படுகொலையையும், மனித உரிமைகள், மனிதாபிமாச் சட்ட மீறல்களையும் புரிந்துள்ள ராபக்ஷ அரசாங்கம் அவற்றுக்கான பொறுப்புக்கூறலைச் செய்வதற்கு தயாராக இல்லை என்று மேலும், அண்மைய நாட்களில் அரசாங்கம் பொருளாதார நெருக்கள் காரணமாக அரசாங்கத்தின் மீது அனைத்து இன மக்களும் வெறுப்பினையே வெளிப்படுத்தியுள்ளனர்.

இத்தகையதொரு தருணத்தில் நாம் மாநாட்டில் பங்கேற்பதானது வீழ்ச்சி கண்டிருக்கும் ராஜபக்ஷ குடுத்பத்திற்கு மீண்டும் புத்திதுயர் அளிப்பதற்கு நிகரானதாக மாறிவிடும்.

ஆகவே, இவ்விதமான பினனணிகளைக் கொண்டவர்கள் கூட்டும் சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதில் தமிழ் மக்களுக்கு எவ்வதமான நன்மைகளும் கிடைக்கப்போதில்லை என்றார்.

சர்வ கட்சி மாநாட்டை நடத்தி தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஊடக பேச்சாளர் வசந்த பண்டார தெரிவித்திருந்தார்.

தாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சிமாற்றம் ஏற்படுவதற்கு பாரிய ஒத்துழைப்பு வழங்கியருந்தாக தெரிவித்துள்ள அவர் அரசாங்கம் கொள்கைக்கு முரணாக செயற்படுவதால் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக நாளாந்தம் போராட்டத்தில் ஈடுப்படுவதாகவும் கூறியுள்ளார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி