ரட்டே ரால  தொடர்ச்சியாக அரசாங்கத்தினுடைய உட்பூசல் தொடர்பில் கதைத்து வந்தார்.மீண்டும் கதைக்குமளவுக்கு  உண்மையில் ஒன்று சேர்ந்த காரணங்கள்  உள்ளன.

அரசாங்கத்தின் உள்ளே இருக்கக்கூடிய நெருக்கடி ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்படுவதுடன் பின்னர் அது சுமூக நிலைக்கு வருகின்றது. இருப்பினும் கடந்த தினமொன்று அது வெடித்து சிதறியது. அந்த வெடிப்பின் காரணமாக புதிய நிலவரம் ஒன்று அரசாங்கத்தின் உள்ளே ஏற்பட்டுள்ளது.

உண்மையில் அவற்றை கதைக்க வேண்டும்.சிறிய கட்சி கூட்டணி மேற்கொண்ட முழு நாடும் சரியான பாதைக்கு என்ற வேலைத்திட்டம் வெளியிடல் நிகழ்வுதான் அந்த வெடிப்புக்கு காரணமாகும். அந்த கூட்டத்தில் விமல் கம்மன்பில ஆகியோர் பெசிலுக்கு எவ்வித வரையறையும் இல்லாமல் அவரை விமர்சித்தது தான் என்பதே அரசாங்கத்தின் தவறாகும். அதன் காரணமாக அமைச்சரவையின்  கூட்டுப் பொறுப்பை அவர்கள் முறித்துள்ளார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு. எது எவ்வாறு இருப்பினும் தற்போதும் விமல், கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

இருப்பினும் விமல்  கூட்டத்திலிருந்த வாசு எதிராக செயற்பட்டாலும் அவருக்கு எதிராக எந்தவிதமான செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை. அதனால் வாசு தற்போதும் அமைச்சரே. எவ்வாறு இருப்பினும் வாசு வரையறையுடன் கூடிய ஒரு போராட்டத்தை தற்போது மேற்கொள்வதறை அவதானிக்க முடிகின்றது. போராட்டத்திற்கு தார்மீக அடிப்படையில் வாசு செய்வது ஒரு பொருத்தமற்ற விடயமாகும்.

அவரது இமேஜுக்கு தாக்கம் செலுத்தும் போராட்டமே அது. அடுத்ததாக இந்த பிரச்சனையோடு சிறிய கட்சி கூட்டணிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையே தூர இடைவெளி ஒன்று ஏற்பட்டுள்ளது. உண்மையில் அரசாங்கத்திற்கு தேவை அதுதான். சில சந்தர்ப்பங்களில் வெளிப்படையாக அவ்வாறு காணப்பட்டாலும் உள்ளக ரீதியாக கொடுக்கல்-வாங்கல் இருக்க முடியும்.

தற்போது தொடராக மூன்று  சந்தர்ப்பங்கள் சிறு கட்சிகள் கூட்டணியின் கூட்டத்திற்கு சிறிலங்கா சுதந்திர கட்சி வரவில்லை.  நேற்று முன்தினம் இருந்ததற்கும்  அவர்கள் வரவில்லை.ரட்டே ரால கடந்த ஆக்கத்தில் குறிப்பிட்ட விடயம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிறிய கட்சி கூட்டணிக்கிடையே முரண்பாடு ஏற்படும் தன்மை பற்றி.சிறு கட்சி கூட்டணி நினைப்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  கூட்டணி ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் சமமான அதிகாரத்தையும் தலைமைத்துவத்தையும் கொண்ட சபையொன்று மூலம் வழிநடத்தல் இடம்பெற வேண்டும் என்று. அதனால் வெளிப்படையாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பலவீனமடைகின்றது.அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எவ்வளவு தூரம் இணங்கும் என்று சொல்லமுடியாது.

சில சந்தர்ப்பங்களில் அந்த முன்மொழிவை சிறிய கட்சி கூட்டணி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இன்னமும் முன்வைக்காதும் இருக்கலாம். எவ்வாறு இருப்பினும் ரட்டே ரால குறிப்பிட்ட சிறிய கட்சி கூட்டணியின் விதியானது இன்னும் மாறுபடவில்லை.இன்னும் அவர்களுக்கு இருப்பது அந்த மூன்று option தான். அதாவது ஒன்று ராஜபக்சக்களுக்கு கீழ்ப்படிவது.  இல்லை என்றால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணியுடன் செல்வது, இல்லை என்றால் ஐக்கிய மக்கள் சக்திக்கு செல்வது.

இதற்கு மேலதிகமாக முயற்சிகள் கடந்த காலங்களில் விமலின் பக்கத்தில் மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் மீண்டும் ஜேவிபி பக்கத்துக்கு தகவல் ஒன்றை அனுப்பி உள்ளார்கள். அதற்கு,  வேலை செய்ய முடியுமா என்பதனை கருத்தில் கொள்ளப்படும் என்று, இருப்பினும் ஜேவிபி முழுமையான  உடன்பாட்டை தெரிவிக்கவில்லை. ஜேவிபி குறிப்பிட்டிருந்தது செல்வோம் முன்னோக்கி பார்ப்போம் என. இருப்பினும் அந்த பதிலானது  விமலுடன் கொடுக்கல்-வாங்கலில் தொடர்புபடும் ஜேவிபி அணி மூலமே வழங்கப்பட்டுள்ளது.

அது யாரென்று புதுமையாக  சொல்ல வேண்டிய அவசியம் இல்லை :உங்களுக்கு தெரியும்.ரட்டே ராலவுக்கு  தெரிந்த வகையில் ஜேவிபி அவ்வாறான  ஒரு தீர்மானத்துக்கு செல்ல முடியாது. அவ்வாறு சென்றால் ஜேவிபியின் உள்ளே இருக்கக்கூடிய நெருக்கடி இன்னும் அதிகரிக்கும். விமல் போன்றவர்கள் காரணமாக அந்த நெருக்கடி மேலும் அதிகரிக்கம் நிலைக்கு ஜேவிபி செல்லாது. அடுத்ததாக ஜேவிபி கள்வர்களை எடுக்காது என்பது விமலுக்கும் பொருத்தமானதாகும். அடுத்ததாக சிறிய கட்சி கூட்டணியில் உள்ள டீல் ஒஸ்தார் மூலமாக ஐக்கிய மக்கள் சக்தி பக்கத்துக்கு சமிக்ஞை வழங்கப்பட்டு இருக்கின்றதாம்.ஐக்கிய மக்கள் சக்தியின்  நம்பிக்கை அளிக்கக் கூடிய தகவல்களின்படி அது உறுதிப்படுத்தப்பட்டது. எவ்வாறு இருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தியின் பதிலானது  விமலை நம்பிக்கை கொள்ளவில்லை என்றடிப்படையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் குறிப்பிடுவது விமல் பெஸில் இல்லாவிட்டால் தற்போதும் ராஜபக்சக்களுடன் இணக்கப்பாட்டுடன் இருப்பார்கள  என்று ,விமல் கம்மன்பில போன்று ரத்தன தேரர் இந்த சந்தர்ப்பங்களில் மேற்கொள்வது அசிங்கமான அமெரிக்கருக்கு கடுமையாக தாக்குவதாகும். இருப்பினும் அந்த கதையின் இடையே பெசில் இன்றி ராஜபக்சக்களோடு ஒரு பயணத்தை ஆரம்பிப்பதற்கான முயற்சி உள்ளதாகத் தோன்றுகிறது. ஏனென்றால் அவர்களுக்கு ஏற்ப      ஏனைய அனைத்து ராஜபக்ஷக்களும் மிக்க  பரிதாபம் கொண்டவர்கள்.

அல்லது உண்மையில் விமல் போன்றோர் கையகப்படுத்தப்பட்ட்டு இருப்பதனை அவதானிக்க கூடியதாக முடிகின்றது. அவர்கள் சமிக்ஞை வழங்கிய   எந்த ஒரு பக்கத்தில் இருந்தும் பதில் கிடைக்கப்பெறவில்லை .அதனால்தான் சிறிய  கட்சி கூட்டணி சுயாதீனமாக செயற்பட எடுத்த தீர்மானம் போர்த்தப்பட்டு தற்பொழுதும்  அரசாங்கத்தின் உள்ளேயே வீழ்ந்து கொண்டிருப்பது ஆகும்.தற்போது விமல் அணியின் நிலமைகளை பார்க்கும்போது மீளவும்  ராஜபக்ஷக்களுக்கு கீழ்ப்படிந்து அல்லது சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு கீழ்படிவதே உள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்படுத்துகின்ற கூட்டணி என்பது அண்மையில் நடைபெறக்கூடிய ஒரு விடயமல்ல. சரியாக கூட்டணி கட்சிகளின் 10 இன் நோக்கம் அதே அடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நோக்கத்தோடு காணப்படவில்லை .விமல் கம்மன்பிலவை நீக்கிய பின்னர் அரசாங்கத்திற்கு தங்களது    அணிகள் மூலம் விமர்சனங்கள் ஏற்பட்டுள்ளது.  இன்னமும் அந்த எண்ணமானது இருப்பது விமலுக்கு சாதகமான அடிப்படையிலேயே.

இருப்பினும் விமல் தொடர்ச்சியாக பெசில் தொடர்பில் பொருத்தமற்ற வகையான விடயங்களை கூற முற்படுவது சில சந்தர்ப்பங்களில் அவர் மீதான பரிதாப நிலையை கொண்டுவந்து அடுத்த பக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமையும். இந்த பிரச்சினை மூலம் ராஜபக்ஷக்களுக்கு இடையே உள்ள எதிர்ப்பு  தற்காலிகமாக சம நிலைக்கு உட்பட்டுள்ளது. சமநிலைக்குட்படல் அல்ல குறைவடைந்துள்ளது. கடந்த தினம் ஒன்றில் மஹிந்த குறிப்பிட்டிருந்தார் பெசிலுக்கு சில உறுப்பினர்கள் மீது தனிப்பட்ட முறையில் இருக்கக்கூடிய முரண்பாடு காரணமாக அவர்களை நீக்க முடியாது என்று.

விமல் அணியை விரட்டியடித்தது தொடர்பில் தற்போது ராஜபக்சக்கள்  கடைப்பிடிப்பது மௌனமான ஒரு முறையைத் தான்.அது தொடர்பிலான விடயம் தற்போது மொட்டுவினுள் கதைப்பதில்லை.  விமல் கம்மன்பில தொடர்பில் கதைப்பது இந்த சந்தர்ப்பத்தில் பொருத்தமற்றது என்று மொட்டு தீர்மானித்துள்ளது.மொட்டுவின் பெசில் அணி அரசியல்வாதிகள் அது தொடர்பில் கதைக்காமல் இருப்பதற்கு உபதேசம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அவர்களுக்கு தடை விதிக்கப்பட்ட வசனங்கள் விமல் மற்றும் கம்மன்பில.விமல், கம்மன்பில்,வாசு மேற்  கொள்வது அதற்கு அடுத்த பக்கம். அவர்கள் எப்படியாவது பெசிலை தொடுப்பதற்கு உயர்ந்தபட்ச முயற்சியை மேற்கொள்கின்றனர். எவ்வாறு இருப்பினும் இந்த முரண்பாடு காரணமாக அரசாங்கத்தின் உள்ளே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேறு ஒரு உபாயமொன்றை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் உள்ளே அனைவருக்கும் அழகியாக உள்ளது. 

உண்மையிலேயே ரட்டே ரால குறிப்பிடுவது இச்சந்தர்ப்பத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சி வெளியேறவில்லையாயின் அவர்களுக்கு கூடிய ஒரே ஒரு விடயம் அரசாங்கத்தின் உள்ளே யாருடையதும்  அழகியாக இருப்பதுதான். ஏனென்றால் அரசாங்கத்தின் உள்ளே யாருடையதாவது உதவிகளை தேடுபவர்கள் அதிகமானவர்கள் இருக்கின்றார்கள்.அதனால்தான் மைத்ரி தொடர்ந்தும் குறிப்பிடுவது சிறி லங்கா சுதந்திரக் கட்சி உருவாக்குகின்ற கூட்டணியானது 10 கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு விடயம் என்று. அடுத்ததாக அரசாங்கத்தின் உள்ளே இருக்கக்கூடிய முரண்பாடுகளுக்கு  சமூகத்திலிருந்து பாரிய எதிர்ப்பு வருகின்றது. அதனை கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு முடியவில்லை.

அதனால் ராஜபக்ச பக்கத்தில் முயற்சிப்பது இந்த காலத்தை தலையை சிறிதாய் சாய்த்து செல்வதற்கே.அது ஜனாதிபதியின் நேற்று முந்திய தின கதையிலும் இருந்தது. ஜனாதிபதியின் கதையில் பழைய  விளையாட்டுகளின்றி  ஜனாதிபதி மக்களிடம் பணிவான முறையில் வேண்டி கொள்கின்ற விடயங்கள் காணப்பட்டிருந்தது. அதனால் பெசில் ராஜபக்ஷ நாட்டில் தற்போது உருவாகி உள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் பதில் காண்பதற்கு முயற்சிப்பதனை என்பதை நாங்கள் அவதானிக்க முடிகின்றது.

ஏனென்றால் இந்த நிலை தொடர்ச்சியாக இருக்குமாக இருந்தால் ராஜபக்ஷக்களுக்கு உண்மையிலேயே கடும் விளைவுகள் ஏற்படும் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். குறைந்தபட்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தத்தை ஒரு குறிப்பிட்ட அளவாவது சமப்படுத்த  அவர்கள் முயற்சி செய்கின்றார்கள். பெசிலின் இந்தியாவுக்கான விஜயமும் அதற்கு சாட்சியாக அமைந்துள்ளது.அதற்கு பதில் எவ்வாறு சரி வழங்குவதற்கு ராஜபக்ஷக்களுக்கு தெரிந்த அனைத்து விளையாட்டுகளையும் அவர்கள் மேற்கொள்கின்றார்கள்.

எந்த விளையாட்டுக்களை போட்டாலும் அவர்களுக்கு இருப்பது நாட்டை விற்பனை செய்வதனை தவிர வேறொன்றும் இல்லை. இருப்பினும் தற்பொழுது நாட்டை விற்பனை செய்ய வேண்டாம்  என்ற நிலை ஏற்படுத்தப்படுவது கிடையாது. அதற்கு மேலதிகமாக மக்களுக்கு பசி ஏற்பட்டுள்ளது.அதாவது பெசிலுக்கு  அவசியமான ஒரு நிலைக்கு நாடு வந்துள்ளது. நேற்று முன்தினம் பெசில் இந்தியா செல்வதற்கு முன்னர் சம்பூர், மன்னார்,பூநகரி போன்ற திட்டங்களை இந்தியாவுக்கு வழங்க விருப்பத்தை தெரிவித்துள்ளார். 

அதன்பின்னரே இந்தியா தேங்காய் சிரட்டையை  கொண்டு செல்லுங்கள் என்று இந்தியா குறிப்பிட்டது.  தற்போது வீரனைப்போல் 1 பில்லியன்  டொலரை கடனாக பெற்று வருவார். அதே போன்று இவர்கள் விரைவாக சீன சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவார்கள். சில சந்தர்ப்பங்களில் சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு அதன் மேலேயே கைச்சாத்திடலாம். எவ்வாறு இருப்பினும் ராஜபக்சக்கள் மேற்கொள்வது வெளிப்படையாக இருக்கக்கூடிய வரிசையை இல்லாமல் செய்து நிலையை ஓரளவாவது கட்டுப்படுத்த.

இருப்பினும் அதனை செய்வது எங்களுடைய  நாட்டினுடைய தனித்துவத்தை தாரைவார்த்து விட்டே ஆகும்.அதுவரை இவர்கள் ஒவ்வொருவருடனும் சமாதான உடன்படிக்கையை கைச்சாத்திட்டுக்கொண்டு செல்வார்கள்.சர்வகட்சியை கூட்டுவதற்கும் அதற்குத்தான். இருப்பினும் ரட்டே அல்ல குறிப்பிடுவது இவர்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தேசிய அரசாங்கத்திற்கு செல்லுவார்கள் என.

அதனால் அந்த எல்லையை மீறியதாகவும் அமையக்கூடும். அதுவரை ராஜபக்சக்கள் ஆட்டுத் தோலைப்போர்த்திக்கொள்வர்.இருப்பினும் அந்த தோலினுள் இருப்பது பழைய ஓநாய்தான்.இறுதியாக அரசாங்கத்தினுள் தீ பொறிகின்றது என்றே குறிப்பிட வேண்டும்.எவரும் நல்ல நிலையில் அல்ல.

அவ்வாறாயின் போய் வருகின்றேன்

கடவுள் துணை.

வெற்றி கிட்டட்டும்

இப்படிக்கு

ரட்டே ரால

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி