இன்று (20) பிற்பகல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கடவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் பெறுவதற்காக வரிசையில் நின்ற 70 வயதான முச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


எரிபொருளைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த போதே குறித்த நபர் தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அவர் உடனடியாக ராகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்தவர் மாகொல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, நேற்றும் கண்டியில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் 70 வயதுடைய நபர் ஒருவர் மண்ணெண்ணெய்க்காக நீண்ட வரிசையில் காத்திருந்த போது இவ்வாறு விழுந்து உயிரிழந்துள்ளார்.


அம்புலன்ஸ் மூலம் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்தவர் உடதலவின்ன பகுதியைச் சேர்ந்த 70 வயதான மொஹமட் இல்லியாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இறந்தவர் மண்ணெண்ணெய்க்காக ஏற்கனவே நீண்ட நேரம் கடுமையான வெயில் வரிசையில் காத்திருந்ததாகவும், தொடர்ந்து குறித்த பகுதியில் பெய்த கனமழையின் பின்னர் அவர் விழுந்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.


இதனிடையே இன்று (20) பிற்பகல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளமை நாட்டில் மேலும் கவலையை அதிகரித்துள்ளது.

இதேபோல் இரு தினங்களுக்கு முன் மண்ணெண்ணெய்க்காக வரிசையில் காத்திருந்த பெண்மணி ஒருவர் மயங்கிவிழுந்தமை குறிப்பிடத்தக்கது. 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி