75,000 ரூபாய்க்கும் குறைவான மாத வருமானம் உள்ள குடும்பங்களுக்கு 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கான திட்டத்தை தயாரிப்பதற்கான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள தொழிலாள வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.

நாட்டில் கட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துவருவதால் பொது மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் அரச சேவை ஊழியர் சங்கம் கடந்த மார்ச் 15ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.


சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைத் தொழிலாளர் சங்கம், தொழிற்சங்கத் தலைவரும் இணைச் செயலாளருமான அன்டன் மார்கஸ், இது தொடர்பில் "கடவுளே எமக்கு என்ன நேர்ந்தது?" என்ற தலைப்பில் ஒரு துண்டுப் பிரசுரத்தை அச்சடித்து விநியோகித்தார்.


நாட்டின் அனைத்து அத்தியவசிய பொருட்கள், போக்குவரத்து செலவுகள் உட்பட அனைத்தும் 40 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலைமை மேலும் மோசமடையும் சூழல் காணப்படும் நிலையில் இவ்வாறு மக்களுக்க நிவாரணம் பெற்றுக்கொடுக்க அன்டன் மார்கஸ், முயற்சித்துள்ளார்.


“அந்நியச் செலாவணி நெருக்கடியுடன் இணைந்து இந்த கடுமையான பொருளாதாரச் சரிவைக் கட்டுப்படுத்துவதற்கான தெளிவான மற்றும் நடைமுறைத் திட்டம் அரசாங்கத்திடம் இருப்பதாகத் தெரியவில்லை.


இதனால், எதிர்காலத்தில் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரும். இதனால் தனியார் துறையினர், ஏற்றுமதி தொழிலாளர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள், முறைசாரா பொருளாதாரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் தினசரி ஊதியம் பெறுபவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.” என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலைமையை நிவர்த்தி செய்யும் நோக்கில் சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கம் மூன்று பிரதான முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது.
அவை,

  1. இந்த வருட இறுதி வரை அந்நிய செலாவணி நெருக்கடியை தற்காலிகமாக தணித்து, நீண்ட கால அடிப்படையில் அதற்கு முன்மொழியப்பட்ட நிரந்தர தீர்வுகளை விரிவாக நாட்டுக்கு முன்வைத்தல்.
  2. தனியார் துறை தொழிற்சங்கங்கள் கோரும் ஊதிய உயர்வுக்கு மேலதிகமாக, எரிபொருள், மண்ணெண்ணெய், எல்பி எரிவாயு, ரொட்டி, கோதுமை மாவு, அரிசி, சர்க்கரை மற்றும் பருப்பு ஆகியவை அனைத்து குடும்பங்களுக்கும் போதுமானதாக இருக்கும் வகையில் குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்கு ரேஷன் முறையை வழங்கவும்.
  3. மீனவர்களுக்கு மீன்பிடி படகுகளுக்கு தேவையான எரிபொருளை மீன்பிடி கூட்டுறவு சங்கங்கள் மூலம் சலுகை விலையில் வழங்குதல்.


அத்தோடு சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்கம், அரசியலை சீர்குலைக்காமல் அமுல்படுத்தும் திட்டமொன்றையும் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது.

  1. ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் மாதாந்தம் 75,000 ரூபாவிற்கும் குறைவான வருமானம் பெறும் குடும்பங்களை இரண்டு வாரங்களுக்குள் அடையாளம் காண நடவடிக்கை எடுக்கவும்.
  2. இந்த நிவாரணத்தை பெறும் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களிடமிருந்து அவர்களின் பிப்ரவரி மாத சம்பள அறிக்கையின் பிரதியை பெற்று உறுதிப்படுத்தல்.
  3. கிராம சேவையாளர் பிரிவில் நிவாரணத்தை பெற தகுதி உடையவர்களின் பட்டியலை உடனடியாக வெளியிடவும்,
  4. நிவாரணத்தை பெறுபவரின் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஒரு கூட்டுறவு, சதொச மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பெயரைக் கோருவதன் ஊடாக, அங்கு குடும்பங்கள் தங்கள் நிவாரணங்களை எளிதாகப் பெற வழி செய்ய முடியும்.
  5. நிவாரணத்தை பெறுபவர்களுக்கு அடையாள அட்டை வழங்கவும்.


மக்களின் அன்றாடத் தேவைகளுக்காக இவ்வாறான சலுகைப் பொருட்களை வழங்குவதற்கான விரிவான திட்டமொன்றை முன்வைத்து, அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு உடனடியாக சந்தர்ப்பம் வழங்குமாறு ஜனாதிபதியிடம் சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் அன்டன் மார்கஸ் கோரியுள்ளார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி