யுக்ரேன் - ரஷ்ய  முரண்பாடு உலகமட்டத்தில் ஒரு பேரவலமாக மாறிவிட்டது. இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின்னர் அதிகமான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தது இந்த சந்தர்ப்பமாகும்.

உயிரை பாதுகாக்கும் நோக்கோடு அகதிகளாக இடம்பெயர்ந்தவர்களாக மாறிய பின்னர் அதிகமானவர்களுக்கு நினைக்கத் தோன்றுவது இறந்தால் அதனைவிட சிறந்தது என்று. உண்மையில் ஊடகங்களில் காட்டுகின்ற அந்த கவனிப்பு ஒருபோதும் அவர்களுக்கு கிடையாது.

உங்களுக்கு ஞாபகம் இருக்கும் சிரியா அகதிகளுக்கு எவ்வாறு ஐரோப்பியர்கள் மேற்கொண்டார்கள்தற்போது போலந்திற்கு இதனை  பொறுத்துக்கொள்ள முடியவில்லை. போலந்தை விட முன்னேறிய நாடான இங்கிலாந்து  இன்னமும் அகதிகள் 5 ஆயிரம் பேரை பொறுப்பேற்கவில்லை.

தற்போது உக்ரேனில் மாத்திரம் 16 இலட்சத்திற்கு அதிகமான அகதிகள்  இருக்கின்றார்கள். அடுத்ததாக ரட்டே ராலவிற்கு கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் மரணங்களின் எண்ணிக்கை இதனைவிட அதிகரித்து இருக்கக் கூடியதாக உள்ளது. 

காயப்பட்டவர்களது  எண்ணிக்கையை மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையைவிட மூன்று நான்கு மடங்காகும். எவ்வாறு இருந்த போதிலும் எந்த இடத்திலும் யாருக்கும் எதிராக யுத்தம் நடைபெற்றாலும் அது மிலேச்சத்தனமானது. யுத்தத்தினால் யாருக்கும் வெற்றி கிடைக்கப் பெறாது.

வெற்றியின் இடையே இருப்பது தோல்விதான். எவ்வாறு இருப்பினும் பிரச்சினை யுத்தம்வரை விருத்தியடைந்து சென்றதன் பின்னால் யுத்தத்தின் உள்ளே தார்மீக ரீதியான விடயங்களை தேட முடியாது. சேவியர் போன்று படத்திலே  யுத்தத்தின் கொடூரமான காட்சிகளை சிறப்பாக காட்டுகின்றார்கள். யுத்தத்தின் உள்ளேயும் மனிதாபிமானம் ஏற்படுகின்ற தன்மையை சிறப்பான முறையில் காட்டுகின்றார்கள்.

அது நாம் நேரடியாக யுத்தத்திற்கு  கொண்டு செல்கின்ற ஒரு படம் ஆகும். அந்தச் சிறப்பற்ற தன்மைக்கு இருப்பது அந்த மனிதாபிமானமற்றவர்களாக இருக்கக்கூடியவர்கள் அமெரிக்கன் காரர்களாக இருப்பது மாத்திரம்தான். அதுதான் மேற்கத்தேய பிரச்சார பொறிமுறை  ஒவ்வொரு துறையை ஆக்கிரமித்து இருக்கின்றது.அதனால் ரட்டே ரால குறிப்பிடவில்லை அனைத்து  அமெரிக்க காரர்களும் மனிதாபிமான மற்றவர்கள் அல்ல என்று.

தற்போது நாம் ஒரிஜினல்  அமெரிக்கன் காரனையும் டுப்ளிகேட் அமெரிக்கன் ஆகிய இரண்டு பேரையும் கண்டிருக்கின்றோம். அதிலிருந்து தெளிவாக விளங்கக் கூடியதாக இருக்கிறது அமெரிக்கர் கூறுவதனை விட யதார்த்தம் கூடிய தூரத்தில் உள்ளது என்று. சிறந்த உதாரணம்தான் பெசில். அது வேறு ஒரு கதையாகும். நாங்கள் சொல்வது உக்ரேன்-ரஷ்ய யுத்தம் பற்றி.

உண்மையில் பிரச்சினை யுத்தம் வரை விருத்தியடைந்து செல்லாமல் நிறுத்துமளவிற்கு செயற்படல் வேண்டும். இல்லை எனின் அந்த கண்ணீருக்கு எந்த ஒரு பிரதி பலனும் கிடையாது.மேற்கத்தேயம் செய்வது குரோதத்தை விதைத்து விதைக்கப்பட்ட யுத்தத்தை மேற்கொள்ள தேவையான ஆயுதத்தை வழங்குவதாகும்.

விசேடமாக இரண்டு நாடுகளுக்கும் இடையே உருவான யுத்தத்தை தடுப்பதற்கு இருக்கக்கூடிய சிறந்த பொறிமுறையாக இருப்பது இராஜதந்திர  முறை தான்.இருப்பினும் இவ்று எந்த முறையை பயன்படுத்தினாலும் இறுதியில் யுத்தம் வரும். அதற்கு ஒரு நாடு கடைப்பிடிக்கின்ற வெளிநாட்டுக் கொள்கையும் தாக்கம் செலுத்துகின்றது. விசேடமாக இந்த இடத்தில் பிராந்திய பாதுகாப்பு என்கின்ற விடயம் முக்கியமானது.

நாட்டினுடைய தலைவர் ஒருவருக்கு தலைவர் ஒருவர் தேசிய  பாதுகாப்பு தொடர்பில் நினைப்பது போன்று  தாங்கள் எடுக்கின்ற தீர்மானம் பிராந்திய பாதுகாப்புக்கு எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்ற விடயத்தை அவர்கள் சிந்தித்தல் வேண்டும். ஏனென்றால் இந்த உலகத்திலேயே அதிகாரம் என்பது மிக வேறுபட்டதாக காணப்படுகின்றது. தற்போது உலக வல்லரசுகளுக்கு புறம்பாக பிராந்திய ரீதியாக வல்லரசுகள் உருவாகி உள்ளது.

உக்ரேன் என்பது அவ்வாறான ஒரு பிராந்தியத்தில் இருக்கக்கூடிய விசேடமான அமைப்பை கொண்ட ஒரு நாடு ஆகும். அதே போன்று ஒவ்வொன்றுக்கும் எதிரான தன்மை உடைய உலக வல்லரசுகள் இரண்டினிடையே  இருக்கக்கூடிய ஒரு நாடாகும். ஒரு பக்கத்தில் நேட்டோ  அடுத்த பக்கத்தில் ரஷ்யா.

இந்த இரண்டும் வேறுபட்ட கொள்கைகளை கொண்டது. நீங்கள் யாராவது இதன்போது கேட்க முடிவது உக்ரேன் மக்களில் பெரும்பான்மையோர் நேட்டோ அங்கத்துவத்தை பெற விரும்பின் ரஷ்யாவுக்குள்ள பிரச்சினை என்னவென்று. இல்லை அந்த கேள்வியை அவ்வாறு அல்ல கேட்க வேண்டும்.உக்ரேன் நேட்டோ அங்கத்துவத்தை பெற்றுக்கொள்வது ரஷ்யாவுக்கு எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்று தான்.

நேடரடோ ரஷ்யாவுக்கு ஒரு முக்கியமான பிரச்சினை. இதில் ரஷ்யா நேட்டோ மிசையில் இடைவெளியில் அமைந்து இருக்கின்றது. அதனால் ஒரு மக்கள் அபிப்பிராயம் அல்ல 10 தடவை  மக்கள் அபிப்பிராயம்  மேற்கொள்ளப்படினும் உக்ரேன் நேட்டோ உறுப்புரிமையை பெற்றுக் கொள்வதற்கு முன்னர் ரஷ்யா அதன் செயற்பாடுகளை மேற்கொண்டு விடும். 2014இல் ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமித்தது.

அதுவும் இப்பிரச்சினைதான். அந்த அனுபவம் சொலன்ஸ்கிக்கு இருக்கின்றது. அதனால் யாராவது புட்டின் தவறு என்று கூறினும்  ரஷ்யா  சார்பாக புட்டின்  தீர்மானம் மேற்கொள்வதனை யாரும் நிறுத்த முடியாது.ரஷயாவுக்கு செய்யக்கூடிய வேறு விடயம் ஒன்றும் இருக்கவில்லை. இதனை விளங்க எமது நாட்டில் பல உதாரணங்கள் உண்டு.

அரசியல் ரீதியாக எந்த விமர்சனம் இருந்தாலும் அன்று தொடக்கம் இன்றுவரை இந்த நாட்டில் சிறந்த வெளிநாட்டு கொள்கையை கடைபிடித்தவர் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்களே. அவருடைய வெளிநாட்டு கொள்கையாக இருந்தது அணிசேராக் கொள்கை ஆகும்.அன்று மாஷல் டிட்டோக்களோடு தோளோடு தோள் நின்ற ஸ்ரீமாவோ அணிசேரா கொள்கையை மூலம் உலகை  வலுப்படுத்தினார்கள்.

அன்றைய உலகம்  இன்றைய உலகம் போன்று பன்மைத்துவ  உலகம் அல்ல.அன்று இருந்தது மூன்றணி உலகமே காணப்பட்டது.  உலகத்தில் அமெரிக்கா மற்றும் சோவியத் என்ற இரு அணிகளே இருந்தது. இந்த இரண்டுக்கும் தொடர்பு படாத அணிசேரா அமைப்பும் இருந்தது.

அன்று எங்களுடைய அண்டை நாடாகிய இந்தியா ரஷ்யா சார்புடையதாகவே இருந்தது. அதனால் இந்தியாவுக்கு அமெரிக்காவுக்கு மேற்கொண்ட பதிலடியாகவும் இது அமைந்திருந்தது.இருப்பினும் சிறிமாவோ இந்நிலைக்கு முன்னால் அதி சிறந்த இராஜதந்திரி என்பதனை வெளிக்காட்டினார். 

அன்று இந்தியா இலங்கைக்கு கெளரவத்தை செலுத்தியது.  அன்று இலங்கை கொண்டு இருந்த பூகோள ரீதியான தன்மையே இன்றும் அதே போன்று காணப்படுகின்றது. மேற்கத்திய மற்றும் கிழக்கு பிரதேசங்களுக்கு செல்லும் நுழைவாயிலாக எமது நாடு தான் இருந்தது. அன்று திருகோணமலை, மன்னார், பூநகரி, சம்பூர் போன்ற பிரதேசங்களுக்கு அந்த பெறுமதி இருந்தது.

இன்று இந்தியா ஒவ்வொரு அடிப்படையில் ஈர்த்துக்கொள்ள முற்படும் வடக்கின் தீவுகள் அவ்வாறே இருந்தது. அவற்றுள் சிலவற்றிற்கு இந்தியா உரிமம் கோரியது. எங்களுடைய கடல் பரப்புக்கும் அன்று இந்தியா உரிமம் கோரியது. இருப்பினும் இந்த எல்லா விடயங்களையும் ராஜதந்திர அடிப்படையில் தீர்ப்பதற்கு அன்று ஸ்ரீமாவுக்கு முடியுமாக இருந்தது. உண்மையில் அதிகமான பிரச்சினைகளில் அதிகமான நலன்கள் எமக்கு கிடைக்கப்பெற்றது. சிறிமாவின்  அணிசேரா கொள்கைக்கு இந்தியா மதிப்பளித்தது.

இந்தியா மாத்திரமல்ல முழு உலக நாடுகளும் அதற்கு மதிப்பு வழங்கியது. இருப்பினும் 1977 இல் ஜேஆர்ரின் கைக்கு அதிகாரம் சென்றதன் பின்னர் அந்த நிலை முற்றிலும் மாறுபட்டது.ஜேஆர் என்பவர் அமெரிக்காவின் அடிமை. எங்கி டீகி என்றே அழைத்தார்கள்.  இருப்பினும் ஜேஆர் பெசில் போன்று அமெரிக்க பிரஜை அல்ல. எவ்வாறு இருப்பினும் ஜேஆர் மேற்கொண்டது அமெரிக்க சார்பு தன்மை கொண்ட விடயங்களையே. அதனால் இந்தியாவுக்கு பொறுமை காக்க முடியவில்லை.

ஜேஆர் மூலம் வருவது  இந்தியாவிற்கு வருவது அச்சுறுத்தல் என இந்தியா கருதியது. அதனால் இந்தியா  அன்று தொடக்கம் எங்களை கீழ் நிலைக்கு கொண்டு செல்வதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டது. இந்தியா உத்தியோகப்பற்றற்ற முறையிலும் இராஜதந்திர அடிப்படையிலும் தேவையான தந்திரங்களை அதற்காக பயன்படுத்தியது.அவ்வாறான நிலையில் எமது நாட்டில் வேறு ஒரு தேசத்தை கோரிய தமிழ் இளைஞர்களுக்கு இந்தியா ஆயுதத்தை வழங்கியது. ஆயுதம் மாத்திரமல்ல ஆயுதப் பயிற்சியும் வழங்கியது. பணத்தை வழங்கினார்கள்.

இந்தியாவின் உள்ளே பாதுகாப்பு வழங்கினார்கள். அதுமாத்திரமல்ல நடுநிலை வகிக்க கூடிய வகித்த முதலாவது சந்தர்ப்பத்திலேயே ஜேஆர்ரை கீழ்நிலைப்படுத்தினார்கள்.  அன்று ஜேஆர் நினைத்திருந்தார் எமக்கு உதவி செய்வதற்கு அமெரிக்கா வரும் என்று.

ஜேஆர்ரின் சிறந்த நண்பன் ரேகன் வருவார் என. இருப்பினும் அன்று, அமெரிக்கா சொலன்சிக்கு செய்ததை போன்றே எங்களுக்கும் செய்தது. யுத்தம் நடைபெற இல்லை. ஜே ஆர்ரை நான்கு பக்கத்தாலும் கீழ் நிலைக்கு கொண்டு சென்றார்கள். இந்தியா எங்களுடைய வான் பரப்பை ஆக்கிரமித்தது.

வடக்கிற்கு பருப்பு வழங்கியது.கீழ்ப்படிந்த ஜேஆர்ரை பயன்படுத்தி  முழு நாட்டிலும் ஊரடங்குச் சட்டத்தை ஏற்படுத்தி  இந்தியா இந்து- இலங்கை ஒப்பந்தத்தை  மேற்கொண்டது. இன்றும் எங்களுடைய நாட்டில் அது ஒரு சட்டமாக இருப்பது அதனால்தான். ஜேஆர்ரின் அமெரிக்க சார்பு செயற்பாடு காரணமாக எங்களுக்கு கிடைத்த பலாபலன்கள் தான் அவை அன்று.அன்றை இந்த ஒப்பந்தத்திற்கு நாம் மாத்திரமன்று விடுதலைப்புலிகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இந்தியாவுக்கு இலங்கையை இயக்கக்கூடிய உபாயமாக இருந்த இந்த ஒப்பந்தம் எங்களுக்கு பலாத்காரமாக திணிக்கப்பட்ட விடயமாகும். 13வது அரசியலமைப்பு சட்டம் ஏற்படுத்தப்பட்டு எங்களுக்கு மாகாணசபை என்கின்ற ஒரு வெள்ளை யானை கிடைக்கப்பெற்றது. அன்று தொடக்கம் இன்று வரை உலகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியா எங்களுக்கு ஏற்படுத்தும் அழுத்தங்களில் மாற்றங்களில்லை.

சோவியத் தேசம் வீழ்ச்சி அடைந்தது. இந்தியா எவருக்கும் தெரியாமல் ரகசிய முறையில் மேற்கத்தேயத்தினுள் ஒழிந்து கொண்டது.அது மேற்கத்தேயம் சரிவரும் என்பதனால் அல்ல சீனாவுக்கு இந்தியாவால்  முகம் கொடுக்க முடியாத நிலை இருப்பதனால்.  இன்று எமது நாட்டில் அதிகாரத்தில் இருக்கக்கூடிய  கோழைத்தனமான ராஜபக்ஷக்க அரசாங்கம் இந்தியா, அமெரிக்கா, சீனாவுக்கு இந்த பூமியின் மேல் செயற்பட வைத்து நாட்டை ஏலம்விட்டு கொண்டிருக்கின்றார்கள்.

தமக்கு தரகுப்பணம  கிடைக்கும் என்றால் நாட்டை எந்த ஒருவருக்கும் தாரைவார்க்கும் வெளிநாட்டு கொள்கையை  கடைப்பிடிக்கின்றார்கள். அதனுள்ளேயே இந்தியாவுக்கு எமது நாட்டில் எதனையும் தாக்கி  புதிதாக பெற வேண்டி ஒரு விடயம் ஒன்றும் இல்லை.

இந்த கோழைத்தனம் உடையவர்கள் இந்தியாவுக்கு அனைத்து விடயங்களுக்கும் மண்டியிட்டு வழங்குகிறார்கள். அதனால் எங்களுக்கு  யுத்தம் இல்லை.இருப்பினும் எங்களுக்கு யுத்தம் ஒன்று அண்மையில் இருக்கின்றது. அது எங்களுடைய பூமியின் மேல் இருந்து கொண்டு உலக வல்லரசுகள் ஒருவருக்கொருவர் அடிக்கின்ற யுத்தம். நாம் சாகமுடிவது பிறரின் யுத்தத்திற்கு முகம்கொடுத்து. 

அந்த அடிப்படையில் சரியோ பிழையோ உக்ரேனியர்கள்  தங்களுடைய நாட்டை ஆக்கிரமிக்கும்  எதிரிகளுக்கு எதிராகப் போராடி மரணிக்கக் கூடிய பாக்கியம் கிடைக்கப்பெற்றவர்கள். ஆனால் எங்களுக்கு அவ்வாறு இல்லை. எங்களுக்கு இவர்கள் யார் என்று தெரியாமல் நாங்கள் மரணிக்க வேண்டி ஏற்படும்.

துப்பாக்கி சூட்டுக்குட்பட்டவர் மீது அதனை மேற்கொண்டவர் என்ன குரோதத்தை செய்தார் என்பதனை தெரியாமல் இந்நாட்டு நிலையை ஏற்படுத்திய ராஜபக்சக்கள் குரோத த்தோடே மரணிக்க வேண்டி ஏற்படும்.உக்ரேனியர்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம் அவ்வளவுதான்.

வேறுபாடு என்பது உக்ரேனியர்  முந்திவிட்டனர். அதனால் அரச தலைவருடைய பொறுப்பு தேசிய ரீதியாக மாத்திரமல்ல சர்வதேச ரீதியாகவும் அது பின்னிப் பிணைந்துள்ளது. சொலன்சிக்கு நடைபெற்றது அதனை சமப்படுத்த முடியாமல் மேற்கத்தேய பக்கம் சாய்ந்து கொண்டமையாகும்.

அவ்வாறாயின் போய் வருகின்றேன். கடவுள் துணை, வெற்றி கிட்டட்டும்.

இப்படிக்கு

ரட்டே ரால

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி