இலங்கையின் வான்பரப்பை தற்போதைய அரசு இந்தியாவுக்கு விற்றுவிட்டதாக நேற்று (22) ஹப்புத்தளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குற்றம் சாட்டியுள்ளார்.

ஹப்புத்தளையில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஹரீன் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

''ஒரு முக்கிய விடயத்தை மக்களுக்கு  சொல்ல வேண்டும் என்பதற்காக கிராமத்திற்கு வந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த முடிவு செய்தேன். இன்று பாராளுமன்ற அமர்வு தினம் என்றாலும் அவசர விடயமாக இந்தப் பகுதியில் தங்கியிருக்கும் நான் இந்த முக்கியமான விடத்தை சொல்ல வேண்டிய உள்ளது.

இலங்கையில் இன்று மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். மக்கள் வீதிகளில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து செத்து மடிகின்றனர்.கடந்த அமைச்சரவையின் பின்னர் ஏழெட்டு அற்புதமான அறிக்கைகள் வெளியாகியுள்ளன. இலங்கையின் பாதுகாப்பை அதிகப்படுத்துவதாக கூறி  நாட்டின் வான்பரப்பை இந்தியாவிற்கு 29 மில்லியன் டொலர்களுக்கு  விற்பனை செய்யதுள்ளனர்.

இலங்கைக்கு சொந்தமான கடல் பரப்பு சீனாவுக்குக் கொடுக்கப்பட்டது. இலங்கையின் நிலம் சீனாவுக்கு வழங்கப்பட்டது. நாட்டின் துறைமுகம் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டது. இப்போது இலங்கையின் வான்பரப்பு இந்தியாவுக்கு 29 மில்லியன் டொலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது என்றார்.இலங்கையின் வான்பரப்பை விற்பனை செய்வது இதுவே முதல் முறை. கடன் வாங்குவதற்கு முடிவே இல்லை.

இலங்கை மக்களின் வாழ்க்தை தரவுகளைப் பெறுவதற்கான உரிமை கூட இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அரசு இலங்கையின் பாதுகாப்பை இந்தியாவிற்கு விற்று கச்சா எண்ணெய்  ஒப்பந்தத்தை  செய்கிறது. இலங்கையில் மக்கள் வரிசையில் நின்று அவதிப்படுகின்றனர்.

 எமக்கு இந்த அரசாங்கத்தை வழங்கினால், சம்பளம் வாங்காமல், எரிபொருள் பெற்றுக்கொள்ளாமல், பாராளுமன்றத்தில் இலசவ உணவு உண்ணாமல் ஒன்றரை வருடங்கள் வேலை செய்வோம்” என்றார் ஹரின் பெர்னாண்டோ.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி