பசறை பிரதேச சபையின் உறுப்பினர் எஸ். கார்த்தீஸ்வரன் இன்று (24) பசறை பிரதேச சபை முன்றலில் தலை மொட்டையடிப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளார்.


இவர் ஏற்கனவே கொழும்பில் போராட்டக்கள மைதானத்தில் பிச்சை எடுக்கும் நூதனப் போராட்டமொன்றினையும் மேற்கொண்டிருந்தார்.


ஆட்சியாளர்களின் தவறான நிர்வாகத்தினால், நாடு அதாளபாதாளத்திற்கு சென்றுள்ளதை கண்டித்து அவர் இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


பசறை பிரதேச சபை உறுப்பினர் எஸ். கார்த்தீஸ்வரன் மேற்கொண்ட இரு போராட்டங்களும் மக்களின் பேராதவுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சுமார் இரு மணித்தியாலங்கள் நீடித்த இந்த மொட்டையடிப்புப் போராட்டத்தையடுத்து, பசறை பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற பசறை பிரதேச சபையின் மாதாந்த அமர்விலும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிரதேச சபை உறுப்பினர் கலந்துகொண்டார்.


நாட்டில் பொதுமக்கள் எதிர்நோக்கும் அனைத்து பிரச்சினைகள் குறித்த பிரேரணையை முன்வைத்து ஆட்சியாளர்களைக் கண்டிக்கும் கண்டனப் பிரேரணையொன்றையும் முன்வைத்து உரையாற்றினார்.


அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வு மற்றும் தட்டுப்பாடு, எரிபொருள் உள்ளிட்ட எரிவாயு ஆகியனவற்றைப் பெற மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை மற்றும் நாடு அனைத்துத் துறைகளிலும் வங்கரோத்து நிலையினை அடைந்துள்ளமைக்கு காரணமான ராஜபக்ஷக்களின் கூட்டத்தினரையும், ஆட்சியாளர்களையும் கண்டித்தும் மேற்படி மொட்டையடிப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் இதன் போது கூறியுள்ளார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி