சர்வகட்சி மாநாட்டில் ரணிலின் கேள்வியால் உண்மையை உளறிய பஷில்!ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி வாசஸ்தலத்தில் சர்வ கட்சி நாடு இன்று ஆரம்பமாகியது.

இன்று நடைபெற்ற அமர்வில் , ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு,  நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுத்தார்.

முதலில், தமக்கு இதுவரை சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை கிடைக்கவில்லை என பஷில் ராஜபக்ஸ தெரிவித்தார்.எனினும் ரணில் விக்ரமசிங்க குறுக்கிட்டு எழுப்பிய கேள்விகளை அடுத்து, நிதியத்தின் அறிக்கை வரைவு கிடைத்துள்ளதை நிதி அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார்.

எனினும், தாம் சர்வதேச நாணய நிதியத்துடன் பல்வேறு சவால்களை விடுத்துள்ளமையினால், அந்த வரைவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாது என பஷில் ராஜபக்ஸ பதிலளித்தார். 

நேற்று பாராளுமன்றில் உரையாற்றிய போதும், சர்வதேச நாணய நிதியத்தின் நிதி அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதாக சபை முதல் தெரிவித்திருந்த போதும் இதுவரை அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியிருந்தார்.

“வரி தொடர்பான விவாதமும் சபையில் இடம்பெற இருப்பதால் நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக  விவாதிப்பது கடினமாகும்.  இது எமது வரப்பிரசாதத்தை மீறும் செயலாகும். அதனால் நிதி அறிக்கையை விரைவாக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கி ஆளுநர் உட்பட நிதிச்சபை அதிகாரிகளுக்கு இதுதொடர்பாக அறிவிக்கவேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் பஷில் ராஜபக்ஸ  சர்வதேச நாணய நிதியத்தின் நிதி அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு ரணில் விக்ரமசிங்க பல தடவைகள் தெரிவித்திருந்த போதிலும் அந்த அறிக்கை இதுவரை எமக்கு கிடைக்கவில்லை. அறிக்கை கிடைத்தவுடன் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க தயாராக இருக்கின்றோம் என கூறியிருந்தார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி