கடந்த காலங்களில் தெரிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு ஜனாதிபதியும் தமக்கு முன்னைய ஜனாதிபதியை விடவும் ஊழல், வினைத்திறன் மற்றும் திறமையற்றவர்களாகவே இருந்ததாக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இதனை குறிப்பிடப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் ஆழமாக சிதைக்கப்பட்டுள்ளதாகவும், இனம், மொழி, மதம், அரசியல் சித்தாந்தம் இன்றி பொருளாதாரம் மற்றும் ஜனநாயகம் என்பவற்றின் இழந்த நற்பெயரை மீட்டெடுக்க கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச தெரிவித்தார்.

இல்லாவிட்டால் நாடு அராஜகமாகி, அனைவரும் பாதுகாப்பற்ற நிலைக்கு ஆளாக நேரிடும் என்கிறார். ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைக்க சஜித் பிரேமதாச இதுவரை இணங்கவில்லை. வெளிப்படையாக அவர் ஒருவித அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி பதவியையும் விரும்புகிறார்.

அதிகாரத்தில் இருந்த ஒவ்வொரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் தனது முன்னோடிகளை விட பலவீனமானவர்கள் மற்றும் வினைத்திறன் அற்றவர்களாகவே உள்ளனர் என்ற விஜேதாசவின் கூற்று உண்மையாக இருக்கும் என அவதானிகள் கூறுகின்றனர்.

அவசரமாக நோக்கங்களை அடைவதற்காக பின்வரும் விடயங்களை உள்ளடக்கிய அரசியலமைப்பில் 21வது திருத்தம் உள்ளடக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

அவர் அதில் குறிப்பிட்டுள்ள உண்மைகள் பின்வருமாறு:

1- நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்றத்தால் கண்காணிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரங்கள் அமைச்சர்கள் அமைச்சரவைக்கு வழங்கப்பட வேண்டும்.

2- நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருந்து உடனடியாக புதிய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அந்த நியமனத்துடன் தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சிக்காலம் முடிவடையும்.

3- பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஒருமித்த உரையாடல் மூலம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் புதிய பிரதமரை நியமிக்க புதிய ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்படும்.

4- நாடாளுமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இடைக்கால அமைச்சரவை அமைக்கப்படும்.

5- பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் வரை அல்லது பாராளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த அமைச்சரவை அமைக்கப்படும் வரை இடைக்கால அரசாங்கம் தொடரும்.

6- பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், ஜனநாயகக் கொள்கைகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் இடைக்கால அரசு குறுகிய கால மற்றும் நீண்ட காலக் கொள்கைகளை உருவாக்கும்.

7- பொருளாதார நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வுகள் மூலம், கடன் சேவைகளை மறுசீரமைக்கவும், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு நிதி வழங்கவும் சர்வதேச நிதி நிறுவனங்கள் மூலம் பங்குதாரர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தும்.

8- தேசிய பொருளாதாரத்தின் முழு உற்பத்தித்திறனை உறுதி செய்வதற்காக அனைத்து அரசு நிறுவனங்களையும் நிர்வகிக்க திறமையான நபர்கள் நியமிக்கப்படுவார்கள்.

9- உணவு மற்றும் உரம் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் மீது விலைக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தி, அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி மற்றும் சந்தைக்கு வழங்குவதை உறுதி செய்தல்.

10 - நெல், காய்கறிகள், தேயிலை மற்றும் பிற பயிர்களுக்கு கணிசமான அளவு தரமான உரங்களை இறக்குமதி செய்தல்.

11- உரையாடல் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் மூலம் விற்கப்படும் தேசிய வளங்களை மீட்டெடுப்பதற்கான ஒரு திட்டத்தை தொடங்குதல்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி