'பிரகாசமான எதிர்காலம்' மற்றும் 'தேசிய ஒற்றுமை - தேசியக் கொள்கை உருவாகட்டும்' என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய கட்சி இன்று கொழும்பில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபடவுள்ளது.

இந்த போராட்ட 3 மணியளவில் நான்கு வழிகளிலிருந்து வந்து ஹைட்பாக் மைதானத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

அனைவரும் வெள்ளை ஆடையணிந்து மெழுவர்த்தி ஏற்றி இவ்வாறு சத்தியாக்கிரகத்தில் ஈடுபடவுள்ளனர்.

அதற்கமைய கொழும்பு டார்லி வீதி, விகாரமஹாதேவி பூங்கா, கொம்பனி தெரு மற்றும் பேப்ருக் பிளேஸ் ஆகிய நான்கு பகுதிகளிலும் இருந்து மக்கள் பேரணியாக வருகை தந்து ஹைட்பார்க் மைதானத்தில் ஒன்றுகூடவுள்ளனர்.

மக்கள் பேரணி ஹைட்பார்க் மைதானத்தில் ஒன்று கூடிய பின்னர் , ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாலை 4.30 மணியளவில் சத்தியாக்கிரகம் ஆரம்பமாகி 5.30 மணியளவில் நிறைவடையவுள்ளது.

இந்த சத்தியாக்கிரகத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொள்வர் என்று ஐ.தே.க. எதிர்பார்த்துள்ளது.

நாடு கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளமைக்கு தற்போதைய அரங்கமே காரணம் என கண்டனம் வெளியிட்டும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன கடந்த வாரம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தோடு, தேசிய மக்கள் சக்தி நுகேகொடையில் இவ்வாறான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தது.

எவ்வாறிருப்பினும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதை விடுத்து நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்ப்பதற்காக நீண்ட கால தேசிய கொள்கையொன்று எட்டப்பட வேண்டும் என்பதையும் , நாட்டுக்கு பிரகாசமான எதிர்காலம் உருவாக வேண்டும் என்பதையும் வலியுறுத்தி ஐக்கிய தேசிய கட்சி; இவ்வாறு சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி