பிரதமரைச் சந்திக்கச் சென்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு வடமாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.“பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யாழ்ப்பாண விஜயம் ஏமாற்று வேலை.

ஜனநாயகம் என்று கூறிக்கொள்ளும் இந்நாட்டு மக்கள் பிரதமரை சந்திப்பதற்கு அங்கீகாரம் பெற்றுள்ளனர். நிராயுதபாணிகளை பொலிஸார் தாக்குவதையும் தடுப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது” என வடமாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

கடந்த வார இறுதியில் யாழ்ப்பாணம் மட்டுவில் விசேட பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைக்க வந்து பிரதமரை சந்திக்க முயன்ற காணாமல் போனவர்களின் உறவினர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக முல்லைத்தீவிலிருந்து சென்றிருந்த ஈஸ்வரி உள்ளிட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சென்ற பஸ்ஸை மட்டுவில் அம்மன் கோவிலடியில் இடைமறித்த பொலிஸார் பஸ்ஸிலிருந்து  எவரையும் கீழே இறங்கவிடாது தடுத்ததுடன் பஸ் கதவை மூடி  இடையூறை ஏற்படுத்தியிருந்தனர்.

e036c8f6 9324 4314 91be b437ef327b27

 யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் பஸ்ஸிலிருந்து குதித்த காணாமல் போனவர்களின் தாய்மார்கள் குழுவினர் போராட்டத்தின் போது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட போது ஏற்பட்ட குழப்பத்தை ஊடகவியலாளர்கள் காணொளியில் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் பஸ்ஸிலிருந்து அனைவரையும் இறங்க அனுமதிக்குமாறு கோரியும் தமது போராட்டத்துக்கு தடை ஏற்படுத்திய பொலிஸாரின் நடவடிக்கையை கண்டித்து பஸ்ஸிக்இதன்போது பொலிஸாருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் இடையில் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதன்போது பஸ்ஸின் வாசல் படியிலிருந்து பொலிஸாரால் கீழே இழுத்தெறியப்பட்ட   ஈஸ்வரி பலமாக கீழே விழுந்து நிலத்தில் அடிபட்ட  நிலையில் அங்கிருந்த பொலிஸார் சப்பாத்து கால்களால் வயிற்றுப்பகுதியில் மிதித்துள்ளதோடு தாக்குதலும் மேற்கொண்டுள்ளனர்.

IMG 20220321 WA0028

பொலிஸாரால் தாக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் முல்லைத்தீவு தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி    போராட்டம் நிறைவுற்று முல்லைத்தீவிலுள்ள தனது வீட்டுக்கு சென்ற நிலையில் வாந்தி எடுத்தபின்னர்  மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு உறவினர்களால் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து  சிகிச்சை பெற்று வருகின்றார். 

இதேவேளை, குறித்த தினத்தில் பஸ்ஸிருநது இருந்து இறங்கிய போராட்டக்காரர்கள், பிரதமரை வரவேற்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மற்றும் கட்அவுட்களை கிழித்து தீ வைத்து எரித்தனர்.

 எதிர்க்கட்சியில் இருந்தபோது இவ்வாறான போராட்டங்களை நடத்தியவர் மகிந்த ராஜபக்ச என்பதால் அவர் ஆட்சிக்கு வந்ததும் மற்றவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை தடுப்பது ஜனநாயகமல்ல என வடமாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் தெரிவித்துள்ளார்.

"சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவல்துறையினரின் மனித உரிமை மீறல்கள் ஒரு ஜனநாயக நாட்டில் நடக்கக் கூடாது" என்று அவர் மேலும் கூறினார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி