இன்று மார்ச் 21ஆம் திகதி. சர்வகட்சி மாநாடு நடைபெற சரியாக இன்னும் ஒரு நாள் இருக்கின்றது. மைத்திரி குறிப்பிடுவது இந்த சந்தர்ப்பத்தில் நாடு எதிர்நோக்கி இருக்கக் கூடிய மிக கடுமையான நெருக்கடிக்கு அனைத்து கட்சிகளும் வருகை தந்து தங்களுடைய முன்மொழிவுகளை முன்வைக்க வேண்டும் என்று. உண்மையில் மைத்திரி அந்த விடயத்தைக் குறிப்பிடுவது மிகவும் உணர்வு பூர்வமானதாக அமையலாம். இருப்பினும் முன்மொழிவுகளை முன்வைக்க வேண்டியது ராஜபக்சக்கள் தானே .ரட்டே ரால மைத்திரியிடம் கேட்பது யார் இந்த ராஜபக்சக்களை நம்பிக்கை கொள்கிறார்கள்.



தேசிய மக்கள் எழுச்சி சர்வகட்சி மாநாட்டிற்கு செல்வதில்லை என்று கூறிவிட்டார்கள். அதற்கு அப்புறம் விமல், வாசு, கம்மன்பிலவும் பங்குபற்றுவது இல்லையாம். இருப்பினும் அவர்கள் சிறிய கட்சி கூட்டணி 10 கட்சிகளுன் உடன்பாட்டை பெற்றுக்கொள்ள முடியாது இருக்கின்றார்கள். ரதன, திஸ்ஸ விதாரண போகின்றார்கள். சிறிய கட்சி கூட்டணி ஒருபோதுமர நேரடியாக தீர்மானங்களை எடுத்ததில்லை. அவர்களுடைய தீர்மானங்கள் அரைவாசி உட்பட்டதுதான். ஐக்கிய மக்கள் சக்தி பங்குபற்றுவது இல்லையாம். உண்மையில் சஜித் குறிப்பிட்ட கதைகளின் அடிப்படையில் அவர்கள் பங்குபற்ற முடியாது. அவர்கள் இந்த அரசாங்கத்திற்கு காலம் வழங்கியது ஒரு மாதமே. அவ்வாறு சொன்னது பின்னர் எவ்வாறு அதற்கு போவது. ஜீவன் தொண்டமானும் செல்வது இல்லையாம். ரணிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இன்னும் எந்த ஒரு விடயத்தையும் குறிப்பிடவில்லை .நேற்று முன்தினம் கம்பஹா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட பிரஜைகள் மாநாட்டில் நிமல் ஸ்ரீபால டி சில்வா குறிப்பிட்டது சர்வகட்சி மாநாடு பெற்றுக்கொள்ளப்பட்டது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெற்றுக்கொண்ட பாரிய வெற்றி என்று குறிப்பிட்டார்.

ரட்டே ராலவுக்கு நிமல் சிறிபால டி சில்வாவுக்கு குறிப்பிடுவது பெற்றுக்கொண்ட அந்த வெற்றியை அரசாங்கத்தின் உள்ளே வீழ்ந்து சமாதானமான முறையில் கொண்டாடுங்கள் என்று. உண்மையில் ரட்டே ரால குறிப்பிடுவது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தற்போது நாட்டு மக்களுடைய உள்ளங்களை தெரிந்துகொள்ளவேண்டும். தற்போது மீண்டும் மக்கள் உள்ளங்களில் ராஜபக்ஷக்களுக்கு எவ்வித இடமும் கிடையாது. தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவு செய்ய வேண்டும் ராஜபக்சவின் அந்த குவியலில் விழுந்து தொலைந்து போவதா அல்லது வெளியில் வருகை தந்து இருக்கின்றதையாவது பாதுகாத்து கொள்வதா? சர்வகட்சி மாநாடு அல்ல எந்த மாநாட்டை நடத்தினாலும் ராஜபக்ஷக்களுக்கு மீண்டும் No chance.தற்போது ராஜபக்சக்கள் out. உண்மையில் இந்த நாட்டில் இந்த பிரச்சினைக்கும் அப்பால் ராஜபக்ஷக்களுக்களோடு இணைந்து விடை தேடி எந்த பிரயோசனமும் கிடையாது. அவ்வாறு முயற்சிப்பதும் மூர்க்கத்தனமான செயலாகும். உண்மையில் ராஜபக்ஷக்களுக்கு முடியாது. அதனை விளங்கிக் கொள்ள முடியாமல் இருப்பது செத்து மீண்டும் உயிர் பெற்றவர்களுக்கே. ராஜபக்சக்களுக்கு தற்போது குறிப்பிடுவது go home என்று தான்.

அதனால் ரட்டே ரால குறிப்பிடுவது சர்வகட்சி மாநாட்டில் பங்குபற்றுவது பங்குபற்றாமலென்பது எந்த ஒரு பிரச்சினையும் அன்று. அதற்கு செலவழிக்கும் தேநீர் செலவு அநியாயமானது. நாட்டை உயர் நிலைக்கு கொண்டு செல்ல முடியாது. ரட்டே ரால குறிப்பிடுவது அதன் மூலம் இந்த நாட்டுக்கு 5 சதத்துக்கும் பலன் இல்லை. ராஜபக்சக்கள் அதனை மேற்கொள்வது பிரச்சினையை காலம் தாழ்த்தி எதிர்ப்பை சமமாக பகிர்ந்து கொள்வதற்கும். அவ்வாறு சொல்லலும்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எங்களுடைய நண்பர்கள் கோபம் கொள்வார்களோ என்று தெரியவில்லை. பரவாயில்லை இருப்பினும் ரட்டே ரால கோபப்படமாட்டார். தற்போது இந்த நாட்டினுடைய அரசியல் அடிப்படையில் மிகவும் பலவீனமான ஒரு நிலையிலே ராஜபக்சக்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு அது தெளிவாக விளங்குகின்றது. அதனை ரட்டே ரால கடந்த ஆக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்: அதனால் ராஜபக்சக்கள் தற்போது இருக்கின்ற இந்த கஷ்டமான காலத்தில் தலையை குனிந்து கொண்டு செல்ல முற்படுகின்றனர். உண்மையில் இன்று நாட்டை ஆட்சி செய்வது அரசாங்கம் அல்ல. பொலீஸ். பொலீஸ் இல்லை என்றால் இல்லை இன்று எண்ணை வரிசையிலேயே 100க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பார்கள். ராஜபக்சக்கள் போர்த்திக்கொண்டு செல்லும் சஜித், ஜேவிபி, அதேபோன்று ஜனநாயக இளைஞர் அமைப்பு ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் சென்று மேற்கொண்ட போராட்டமாகும். ராஜபக்சக்கள் நெளியாவிட்டால் அவ்வளவு விளையாட்டை செய்ய விடுவார்களா?

உங்களுக்கு தெரியும் கடந்த தினம் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் போராட்டம் செய்வதற்கு ஒரு பிரத்தியேக இடம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு போராட்டம் செய்ய அந்த அப்புகாமி விடவில்லை. நீங்கள் நினைக்கலாம் ஒரே சந்தர்ப்பத்தில் ராஜபக்ஷக்களுக்கு உருவான மிருக அன்பு என்ன என்று? உண்மையில் தற்போது நாட்டின் எல்லாவிடங்களிலும் இருப்பது ராஜபக்சே எதிர்ப்புதான். கண்டவுடன் அவர்கள் கோஷம் எழுப்புகின்றார்கள், சாபமிடுகின்றார்கள், நீங்கள் நினைக்கலாம் எரிபொருள் நிரப்பு வரிசையில் அதேபோன்று கேஸ் வரிசை அருகில் இருக்கக்கூடிய நிலவரத்தை. அந்த இடத்துக்கு ராஜபக்ச ஒருவர் வந்தால் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. கடந்த தினமொன்றில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் மொட்டு உறுப்பினர் ஒருவருக்கு மக்கள் பீப்பாய்களால் தாக்கும் போஸ்ட் ஒன்றை கண்டோம். நேற்று கனக ஹேரத் அதாவது கேகாலை லிட்ரோ கேஸ் பெரியவர். அவருக்கும் கேஸ் சிலின்டரால் அடித்தார்களாம். ஜனாதிபதி மக்களை கண்டவுடன் அவர்களுக்கு கௌரவம் அளிப்பதற்காக தன்னுடைய கண்ணாடியைத் திறந்து செல்லுகின்றபோது தற்பொழுது மக்கள் கேட்பது இப்ப நலமா என்று கேட்கின்றார்கள்.

நாட்டில் இவ்வளவு நெருக்கடிகள் உள்ள சந்தர்ப்பத்தில் மஹிந்த இரண்டு நாள் பயணமாக வடக்குக்கு விஜயம் மேற்கொண்டார். வடக்கில் இருக்கக்கூடிய தாய்மார்கள் வீதிக்கு வந்து காணாமல் போன பிள்ளைகளை கேட்கின்றார்கள்.இறுதியில் மஹிந்த வழிபடச்சென்ற நல்லூர் கோவிலுக்கும் செல்லாமல் வீடு வந்தார். உண்மையில் அவற்றுக்கு செலவழிக்கிற செலவு வீண் செலவாகும். அதனால் நாடு பூராவும் இருக்கக்கூடிய எதிர்ப்பு தொடர்பில் ராஜபக்ஷக்களுக்கு தற்பொழுது விளங்கிய உள்ளது. அது தொடர்பில் உளவுப்பிரிவு கூறிது அவர்களுக்குக் கிடைத்திருக்கும். கடந்த தினம் ஒன்றில் பத்திரிகையொன்றில் ஒழுங்குபடுத்தப்படாத மக்கள் எழுச்சி எழக்கூடிய சந்தர்ப்பம் இருப்பதாக உளவு பிரிவு தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும் உங்களுக்கு ரட்டே ராலவின் ஆக்கத்தை தொடர்ச்சியாக படித்து வந்தால் அந்த விடயம் கடந்த வருடத்திலிருந்தே ரட்டே ரால குறிப்பிட்டிருக்கின்றார். உண்மையில் ரட்டே ரால குறிப்பிடுவது அவ்வாறான போராட்டத்திற்கு தாம் பயம் என்று. அதன் மூலமாக பாரிய அழிவு ஏற்படும். தற்போது சிறிது சிறிதாக மக்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

எரிபொருள் வரிசையில் ராஜபக்ச எதிர்ப்பை போன்று ஏனையவர்களை கொலை செய்யும் அளவுக்கு மக்கள் ஆவேசம் உடையவர்களாக இருக்கின்றார்கள். அடுத்தவருடைய கேஸை உடைத்து எடுக்கின்றார்கள். அடித்துக் கொள்கின்றார்கள். இவைதான் ராஜபக்சக்கள் இந்த நாட்டிலேயே ஏற்படுத்திய கலாசாரம். தற்போது ஏற்படுகின்ற எதிர்ப்புக்கு தாக்கினால் அது தான் இந்த அரசாங்கத்தின் இறுதிக்காலம். ஒரு இடத்தில் தாக்கினால் மக்கள் வன்முறைக்கு செல்லுவார்கள்.ரட்டே ரால நினைப்பது தற்போது இராணுவம் போன்று பொலிசாருக்கும் இந்த நிலவரம் தெரிந்து இருக்கும். அதனால் ராஜபக்சக்களின் உபாயம்தான் இந்த நிலைமையை சம நிலைக்குக் கொண்டுவருவதற்கு சுமூகமாக செல்வது. சர்வகட்சி மாநாடு தேவை. இணக்க பேச்சுக்களை பேசுவதற்கு தற்போது ராஜபக்சக்கள் விருப்பம் உடையவர்களாக இருக்கின்றார்கள்.ஏன் இந்த நிலையை சம நிலைக்கு கொண்டுவருவதற்கு ராஜபக்ஷக்களுக்கு உதவி செய்வது. அது நாட்டுக்கு செய்கின்ற துரோகம் ஆகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதனை விளங்கிக் கொள்ள வேண்டும். அது மிக மூடத்தனமான ஒருவேலை ஆகும்.

ஆகையால் இந்த சந்தர்ப்பத்தில் வைக்கும் சர்வகட்சி மாநாடு எந்த பயனுமற்றது. உண்மையில் இவை மேற்கொள்ள வேண்டியது இந்த நெருக்கடி ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில். தற்போது இவை யாவும் காலம் கடந்துள்ளது. ரட்டே ரால முன் மொழிவது தற்போது சர்வகட்சி மாநாடு அவசியமாக அரசாங்கத்துக்குத் தேவைப்பட்டது ஒன்றல்ல. தற்போது சர்வகட்சி மாநாடு தேவையாக இருப்பது எதிர்க்கட்சிக்கு. அதுதான் ராஜபக்சக்களை விரட்டியடிப்பதற்கான தேசிய உடன்பாட்டை ஏற்படுத்துவதற்கு. ஏனென்றால் அந்த எதிர் கட்சிகள் எதைத்தான் பேசினாலும் தனியாக அடுத்ததாக அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. இதனையே விளங்கிக்கொள்ள முடியாது எனின் ஒன்றுமே அவர்களுக்கு விளங்காது. அதிகார மோகம் கண்ணை மறைத்துள்ளது. உண்மையில் சர்வகட்சி என்ற பருப்பை சாப்பிட்டுவிட்டு சரி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வெளியில் வர வேண்டி ஏற்படும். அவ்வாறு வரவில்லை என்றால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ராஜபக்சவுடன் கீழ்ப்படிந்து உருக வேண்டிய நிலை ஏற்படும். இந்த இடத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சி கடைப்பிடிக்கின்ற உபாயம் ரட்டே ராலவுக்கு தெரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. தற்போது அதன் உள்ளே இருந்து கொண்டு பாதுகாப்பதற்கான அணியொன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இல்லை. தற்போது அரசாங்கம் மேற்கொள்வது பொய் என்பதற்கு சிறந்த சாட்சி தான் அரசாங்கம உண்மையான கதைகளை நாட்டிற்கு சொல்லாமல் மறைப்பது ஆகும்.

மக்கள் மக்களுக்கு உண்மை நிலையை மறைத்து இருக்கக்கூடிய சர்வகட்சி மாநாடு எதற்காக? இந்த நெருக்கடியினல 4 எல்லைகளும் ஜனாதிபதிக்கு தெரியாது என்பது அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை மூலமாக தெளிவாக உள்ளது. அதே போன்று நாட்டினுடைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் எந்த ஒரு விடயத்தையும் நிதியமைச்சர் கடந்த மூன்றரை மாத காலத்திற்குள் நாட்டிற்கு குறிப்பிடவில்லை. அவருக்கு தெரியாது. ராஜபக்சக்கள் மேற்கொள்வது நாட்டுக்கு அவசியமான விடயங்கள் அல்ல தாங்கள் நினைத்ததையே செய்கின்றார்கள். சுருக்கமாக ராஜபக்சக்கள் செயற்படுவது இந்த நாட்டை தங்களுடைய பூதமாக நினைத்துத்தான். முதலாவதாக அந்த அடிமை முறை மனப்பாங்கை ராஜபக்சக்கள் கைவிட வேண்டும். அதிகாரத்தை வைத்துக் கொண்டு அதனை செய்ய முடியாது. அவர்களை வெளியேற்ற வேண்டும். அவ்வாறான மக்கள் கருத்து ஏற்பட்டிருக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பத்தில் தற்போது ராஜபக்சக்கள் உடன் இருந்து கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி brand பெயராக வருவது அக்கட்சிக்கு மிகவும் பயங்கரமானது. மைத்திரி அவ்வாறு இல்லை என்று தற்போது எவ்வளவு குறிப்பிட்டாலும் அதில் எந்தப் பயனும் கிடையாது.

ரட்டே ரால முன்மொழிவது என்னவென்றால் உடனடியாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொது உடன்பாட்டுக்கு வர வேண்டும். அதற்காக சர்வ கட்சி மாநாட்டை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட சிறிய கட்சி கூட்டணிக்கு சொல்ல வேண்டும். நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய பொது செயற்பாடுகள் தொடர்பில் பொது உடன்பாட்டை ஏற்படுத்த அதற்போது முடியும். இந்த நாட்டினுடைய அரசியல் மறுசீரமைப்பு தொடர்பில் பொது உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும். இன்னும் பல விடயங்கள் இருக்கின்றது. குறைந்தபட்சமல அடிப்படை காரணங்கள் தொடர்பில் விரிவாக நாங்கள் உடன்பாட்டுக்கு வர வேண்டும். அது தொடர்பில் நாட்டு மக்களுக்கு ஒரு உறுதிப்பாட்டை வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் எதிர்க்கட்சி அணியினர் இன்னும் தங்களுடைய செயற்பாடுகளை தனித்தனியே மேற்கொண்டால் அது ஒருபோதும் நடைபெறமாட்டாது. இல்லையாயின் எதிர்க்கட்சிக்கு ஜனாதிபதி செயலகம் அருகில் சென்று திரும்பி வரக்கூடிய ஒரு நிலவரம் தான் ஏற்படும். தேசிய மக்கள் சக்தி கடந்த 23 ஆம் திகதி நுகேகொடையில் ஒன்றுகூடி சத்தமிட்டு திரும்பியது போன்றே அமையும்.

தற்போது இந்தப் போராட்டத்தில் அவ்வாறான ஒரு முடிவு ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்களிடத்தில் காணப்படவில்லை. போராட்டத்திற்கு பதில் தேவை. உண்மையில் இதற்கு பதிலாக ரட்டே ரால காண்பது பிலிப்பைன்சின் மாகோஸ் குடும்பம் அதிகாரத்திலிருந்து கீழிறக்கப்பட்டது போன்ற மக்கள் எழுச்சி தான் மிக சிறப்பானது. அதற்கு மக்கள் தயாராகும் போது பலவீனமடையுமல ராஜபக்ச ரெஜிமேன்ட் அவர்களுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்வது பாரிய அரசியல் தவறாகும். அதனால் இலங்கை அரசியலில் ராஜபக்ஷக்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற பீதி தற்போது அவர்களுடைய நெற்றியில் எழுதப்பட்டுவிட்டது.

அவ்வாறாயின் போய் வருகின்றேன்
கடவுள் துணை வெற்றி கிட்டட்டும்.

இப்படிக்கு
ரட்டே ரால 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி